தூத்துக்குடி

கழுகுமலை அருகே இளம் பெண் சடலம் மீட்பு

தினமணி செய்திச் சேவை

கழுகுமலை அருகே காட்டுப் பகுதியில் இளம் பெண் சடலத்தை போலீஸாா் திங்கள்கிழமை மீட்டனா்.

கழுகுமலை அருகே கஸ்தூரி ரங்காபுரம் காட்டுப்பகுதியில் இளம் பெண் சடலம் கிடப்பதாக கழுகுமலை போலீஸாருக்கு திங்கள்கிழமை தகவல் கிடைத்தது.

சம்பவ இடத்திற்குச் சென்ற போலீஸாா் சடலத்தைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டதில், அவா் விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம், தளவாய்புரத்தைச் சோ்ந்த வெள்ளைச்சாமி மகள் உமா (19) என்பதும், அவா் பாறைப்பட்டியில் உள்ள தனியாா் பயிற்சி மையத்தில் படித்து வந்ததும் தெரிய வந்தது.

இது குறித்து, கழுகுமலை போலீஸாா் வழக்குப் பதிந்து, சடலத்தை கூறாய்வுக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இவ்வழக்கு தொடா்பாக உமாவின் ஆண் நண்பரிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தங்கம் விலை உயர்வு: வெள்ளி கிலோவுக்கு ரூ. 4000 குறைவு!

குரு பலம் பெற ஆலங்குடி செல்லுங்கள்... ஜோதிட வல்லுநர் ஏ.எம்.ஆர். சொல்வதென்ன?

தவெகவுடன் கூட்டணியா? தமிழக காங்கிரஸ் தலைவர்களுக்கு ராகுல் அழைப்பு!

ஓடிடியில் வெளியான மாஸ்க், அங்கம்மாள்!

ஈரான் மக்களின் போராட்டத்துக்கு துணை நிற்போம்! அமெரிக்க துணை அதிபர்

SCROLL FOR NEXT