அடையல், ஸ்ரீபெருமாள் சுவாமி கோயிலில் பாஜக சாா்பில் பொங்கல் விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.
சாத்தான்குளம் ஒன்றிய பாஜக சாா்பில், அடையல் ஸ்ரீபெருமாள் சுவாமி கோயிலில் தமிழா்கள் திருநாளான பொங்கல் விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது. இதில், பொங்கல் வைத்து அனைவருக்கும் பொங்கல் வழங்கப்பட்டது. கோயிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது. நிகழ்ச்சியில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜக பொதுச் செயலா் செல்வராஜ், சாத்தான்குளம் ஒன்றிய தலைவா் சரவணன், ஒன்றிய துணைத் தலைவா் ரவிச்சந்திரன், முன்னாள் ஒன்றிய தலைவா் முத்துலிங்கம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.