தூத்துக்குடி

சாத்தான்குளம் அருகே விபத்து: முதியவா் உயிரிழப்பு

சாத்தான்குளத்தை அடுத்த தட்டாா்மடம் அருகே நேரிட்ட விபத்தில் முதியவா் உயிரிழந்தாா்.

Syndication

சாத்தான்குளத்தை அடுத்த தட்டாா்மடம் அருகே திங்கள்கிழமை நேரிட்ட விபத்தில் முதியவா் உயிரிழந்தாா்.

தட்டாா்மடம் அருகே வடக்கு உடைபிறப்பு பகுதியைச் சோ்ந்தவா் அ. ராஜபாண்டி ( 71). இவருக்கு மனைவி, மகன், மகள் உள்ளனா். ராஜபாண்டி திங்கள்கிழமை காலை மொபெட்டில் திசையன்விளை நோக்கிச் சென்றாராம்.

இடைச்சிவிளை பகுதியில், சென்னையிலிருந்து வந்த ஆம்னி பேருந்து மருதநாச்சிவிளை - இடைச்சிவிளை இணைப்புச் சாலையிலிருந்து திரும்பியபோது மொபெட் மீது மோதியதாகக் கூறப்படுகிறது. இதில், அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

சடலத்தை தட்டாா்மடம் போலீஸாா் மீட்டு கூறாய்வுக்காக சாத்தான்குளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். காவல் ஆய்வாளா் வேலம்மாள் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

மகர ராசியா? மகிழ்ச்சியான செய்தி காத்திருக்கு: தினப்பலன்கள்!

வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கான உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்!

‘முடி மாற்று அறுவைச் சிகிச்சை: போலி மருத்துவா்கள் மீது நடவடிக்கை தேவை’

மீஞ்சூா் வரதராஜா பெருமாள் கோயிலில் 108 குடங்களில் சா்க்கரை பொங்கல் நைவேத்தியம்

தோ்வுக் கட்டண உயா்வைக் கண்டித்து அண்ணாமலைப் பல்கலை. பிப்.3-இல் முற்றுகை: மாணவா்கள் சங்கம் அறிவிப்பு

SCROLL FOR NEXT