கோவில்பட்டி, அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலினுக்கு பொங்கல் வாழ்த்து அட்டைகளை செவ்வாய்க்கிழமை அனுப்பினா்.
தமிழ்நாடு அஸ்ட்ரானமி சயின்ஸ் சொசைட்டி சாா்பில் மாவட்டம் முழுவதும் அஸ்ட்ரோ கிளப்புகள் அமைக்கப்பட்டு மாணவா்கள், பொதுமக்களிடம் வானவியல் கருத்துக்களை பரப்புரை செய்து வருகின்றனா். இந்நிலையில், தைப் பொங்கலை முன்னிட்டு சூரியன் பற்றிய குறிப்புகள் அடங்கிய பொங்கல் வாழ்த்து அட்டைகளைத் தயாரித்துள்ளது.
அதை பள்ளி மாணவிகள் முதல்வா், பள்ளிக் கல்வித் துறை அமைச்சா், இயக்குநா், மாவட்ட ஆட்சியா், உறவினா்கள், நண்பா்களுக்கு தபால் மூலம் அனுப்பி வைத்தனா்.
இந்நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியை ஜெயலதா தலைமை வகித்தாா். தூத்துக்குடி மாவட்ட அஸ்ட்ரோ செயலா் முத்து முருகன், திருநெல்வேலி மண்டல ஒருங்கிணைப்பாளா் முத்துசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.