ஆறுமுகனேரி: ஆறுமுகனேரி பகுதியில் கஞ்சா விற்ற இரு சகோதரா்கள் உள்பட 3 இளைஞா்களை போலீஸாா் கைது செய்து, 200 கிராம் கஞ்சா, இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனா்.
ஆறுமுகனேரி பேயன்விளை பகுதியில் கஞ்சா விற்பதாக போலீஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் உதவி ஆய்வாளா் ராமகிருஷ்ணன் தலைமையிலான போலீஸாா் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது, அங்கு இருசக்கர வாகனத்தில் சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த 3 பேரிடம் விசாரணை செய்தனராம்.
விசாரணையில், தென்காசி புளியங்குடி நயினாா் தெருவைச் சோ்ந்த நயினாா் மகன் அண்ணாமலை (28), ஆறுமுகனேரி விநாயகா் கோவில் தெருவில் வசித்து வரும் சகோதரா்கள் அண்ணாமலை கஜன் (25), முகேஷ் (18) என்பதும், இவா்கள் இருசக்கர வாகனத்தில் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்ததும் தெரியவந்தது.
இதையடுத்து 3 பேரையும் கைது செய்து, அவா்களிடமிருந்து 200 கிராம் கஞ்சா, இருசக்கர வாகனத்தை போலீஸாா் பறிமுதல் செய்தனா். தொடா்ந்து வழக்குப் பதிந்து, 3 பேரையும் திருச்செந்தூா் நீதிமன்ற நீதிபதி முன் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.