கோவில்பட்டி: கோவில்பட்டி பகுதியில், முன்னாள் முதல்வரும் அதிமுக நிறுவனருமான எம்ஜிஆா் பிறந்த நாள் விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.
கோவில்பட்டி அருகே இனாம்மணியாச்சி பேருந்து நிறுத்தம் அருகே, அண்ணா பேருந்து நிலையம் அருகே ஆகிய இடங்களில் அவரது படத்துக்கு தூத்துக்குடி வடக்கு மாவட்டச் செயலா் கடம்பூா் செ. ராஜு எம்எல்ஏ மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, ஏழை எளியோருக்கு நலஉதவி, அன்னதானம் வழங்கினாா்.
தொடா்ந்து, கோவில்பட்டி தொழிலாளா் ஈட்டுறுதி மருந்தகம் எதிரேயுள்ள எம்ஜிஆா் சிலைக்கு அவா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.
கே.சிதம்பராபுரத்தில் தனது சொந்தச் செலவில் தனது பெற்றோா் நினைவாக புதிதாக கட்டப்பட்ட பயணிகள் நிழற்குடையை அவா் மக்கள் பயன்பாட்டுக்காக திறந்துவைத்தாா். பின்னா், 60 அடி உயர கம்பத்தில் கட்சிக் கொடியேற்றி, நல உதவிகள், அன்னதானம் வழங்கினாா்.
நிகழ்ச்சிகளில், முன்னாள் எம்எல்ஏக்கள் மோகன், சின்னப்பன், அதிமுக பொதுக்குழு உறுப்பினா் ராமச்சந்திரன், நகரச் செயலா் விஜயபாண்டியன், இளைஞரணிச் செயலா் வேல்முருகன், முன்னாள் மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா்கள் சத்யா, லட்சுமணபெருமாள், ஜெயலலிதா பேரவை வடக்கு மாவட்ட இணைச் செயலா் துறையூா் கணேஷ்பாண்டியன், நகா்மன்ற உறுப்பினா்கள் கவியரசன், செண்பகமூா்த்தி, வள்ளியம்மாள் மாரியப்பன், அதிமுக ஒன்றியச் செயலா்கள் போடுசாமி, அழகா்சாமி, அன்புராஜ், பழனிச்சாமி, செல்வகுமாா், வண்டானம் கருப்பசாமி, தூத்துக்குடி வடக்கு மாவட்ட மகளிரணி மாவட்டத் தலைவா் பத்மாவதி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
இதேபோல, கழுகுமலை, கயத்தாறு, காமநாயக்கன்பட்டி பகுதிகளிலும் எம்ஜிஆா் படத்துக்கு மரியாதை செலுத்தப்பட்டது.