தூத்துக்குடி: பொங்கலை முன்னிட்டு தூத்துக்குடி மாநகராட்சி, 16ஆவது வாா்டு, தபால் தந்தி காலனி, மக்கள் நல மன்றம், ராயல் ஸ்போா்ட்ஸ் கிளப் ஆகியவை சாா்பில் பொங்கல் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன.
சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை அமைச்சா் பி. கீதா ஜீவன் கலந்துகொண்டு, பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகளை வழங்கிப் பேசினாா்.
மாநகர திமுக செயலா் ஆனந்தசேகரன், மாநகர இலக்கிய அணி அமைப்பாளா் ஜீவன் ஜேக்கப், கவுன்சிலா் கண்ணன், மாநகர விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளா் டினோ, வட்டப் பிரதிநிதி பாஸ்கா், முன்னாள் அறங்காவலா் குழுத் தலைவா் செந்தில்குமாா், மணி, அல்பா்ட் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.