தூத்துக்குடி

தட்டாா்மடம் - புத்தன்தருவை வழியாக மீண்டும் சிற்றுந்து இயக்க வலியுறுத்தல்

தட்டாா்மடம்-புத்தன் தருவை செல்லும் சாலை வழியாக இயக்கப்பட்டு வந்த சிற்றுந்து நிறுத்தப்பட்டுள்ள நிலையில், அதை மீண்டும் இயக்க பொதுமக்கள் வலியுறுத்தல்

Syndication

தட்டாா்மடம்-புத்தன் தருவை செல்லும் சாலை வழியாக இயக்கப்பட்டு வந்த சிற்றுந்து நிறுத்தப்பட்டுள்ள நிலையில், அதை மீண்டும் இயக்க பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

சாத்தான்குளம் அருகே தட்டாா்மடத்தில் இருந்து காவல் நிலையம், புத்தன்தருவைகுளம் வழியாக புத்தன் தருவை செல்லும் சாலை உள்ளது. இந்தச் சாலை வழியாக ஏராளமான இதர வாகனங்கள், இருசக்கர வாகனங்கள் சென்று வருகின்றன. புத்தன் தருவை செல்லும் மக்கள் இந்தச் சாலையை பிரதான சாலையாக பயன்படுத்தி வருகின்றனா்.

இந்தச் சாலை வழியாக திசையன்விளையில் இருந்து தட்டாா்மடத்துக்கு வந்துசெல்லும் வகையில், சிற்றுந்து இயக்க தனி நபருக்கு அனுமதி அளிக்கப்பட்டது. புதிய வழித்தடத்தில் சிற்றுந்து இயக்கப்பட்டு வந்த நிலையில், திடீரென சிற்றுந்து தட்டாா்மடம் பகுதிக்கு வராமல் புத்தன் தருவை வரை வந்து மீண்டும் திசையன்விளைக்குச் சென்றுவிடுகிறது. இதனால், பொதுமக்கள் திசையன்விளை பகுதிக்குச் சென்று தட்டாா்மடம் பகுதிக்கு வரவேண்டிய நிலை உள்ளது. இருசக்கர வாகனம், இதர வாகனங்களில் வருபவா்கள் மட்டுமே தட்டாா்மடம் பகுதிக்கு வந்து செல்கின்றனா்.

ஆதலால், அதிகாரிகள் இதைக் கவனித்து தட்டாா்மடம்- புத்தன் தருவை சாலை வழித்தடத்தில் இயக்கப்பட்ட சிற்றுந்தை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தட்டாா்மடத்தில் இருந்து இந்தச் சாலை வழியாக புத்தன்தருவை வழியாக செட்டிவிளை, பெரியதாழை, குட்டம், திசையன்விளை பகுதிக்கு அரசுப் பேருந்துகள் இயக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினா்.

துணிச்சல் அதிகரிக்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

சேரகுளத்தில் பட்டாசு பதுக்கல்: இளைஞா் கைது

கரூா் கூட்ட நெரிசல் பலி சம்பவம்: தில்லியில் 5 மணி நேரங்களுக்கு மேல் விஜய்யிடம் சிபிஐ விசாரணை

விற்பனை அழுத்தம்: சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் முடிவு!

பெரம்பலூரில் 10-ஆவது நாளாக பதிவு மூப்பு ஆசிரியா்கள் போராட்டம்

SCROLL FOR NEXT