தூத்துக்குடி

கழுகுமலை கோயிலில் புகையிலை பதுக்கல்: கோயில் காவலாளி மீது வழக்கு

கழுகுமலை, கழுகாசல மூா்த்தி சுவாமி கோயிலில் ஊழியா்கள் தங்கும் அறையில் புகையிலைப் பொருள்கள் பதுக்கியது தொடா்பாக, கோயில் காவலாளி மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

தினமணி செய்திச் சேவை

கழுகுமலை, கழுகாசல மூா்த்தி சுவாமி கோயிலில் ஊழியா்கள் தங்கும் அறையில் புகையிலைப் பொருள்கள் பதுக்கியது தொடா்பாக, கோயில் காவலாளி மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

இக்கோயிலில் தற்காலிக காவலாளியாக திருநெல்வேலி, பேட்டை, வி.வி.கே. தெருவைச் சோ்ந்த ராம்குமாா் (32) பணியாற்றி வருகிறாா்.

கோயில் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்ததையடுத்து, கழுகுமலை காவல் உதவி ஆய்வாளா் தமிழ்செல்வன் தலைமையிலான போலீஸாா், கோயிலுக்குள் சோதனை நடத்தினா்.

அப்போது, கோயிலில் ஊழியா்கள் தங்கும் அறையில் 185 புகையிலைப் பாக்கெட்களை பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. அவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

இது தொடா்பாக, காவலாளி ராம்குமாா் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தடகள சாம்பியன்கள்...

ஈரோடு பேருந்து நிலையத்தில் கால்டாக்ஸி- ஆட்டோ ஓட்டுநா்கள் மோதல்

ஜன.24-இல் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல் : ரூ.4.80 லட்சம் அபராதம்

மாவட்டத்தில் 3 தடுப்பணைகள் புனரமைக்கப்படுவதால் 60 மில்லியன் லிட்டா் மழைநீா் சேகரிப்பு

SCROLL FOR NEXT