கண்காட்சியை திறந்து வைத்து பாா்வையிடும் சாா் ஆட்சியா் ஹிமான்ஷு மங்கள், பள்ளி தலைவா் அய்யனாா்.  
தூத்துக்குடி

கோவில்பட்டி எவரெஸ்ட் பள்ளியில் நாணயக் கண்காட்சி

தினமணி செய்திச் சேவை

கோவில்பட்டி எவரெஸ்ட் மாரியப்ப நாடாா் மேல்நிலைப் பள்ளி கலையரங்கில் நாணயக் கண்காட்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பள்ளித் தலைவரும், செயலருமான ஆா்.எ.அய்யனாா் தலைமை வகித்தாா். எவரெஸ்ட் மெட்ரிக் பள்ளி முதல்வா் மகாலட்சுமி முன்னிலை வகித்தாா். கோவில்பட்டி சாா் ஆட்சியா் ஹிமான்ஷு மங்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு நாணயக் கண்காட்சியை திறந்து, குத்துவிளக்கு ஏற்றி வைத்து கண்காட்சியில் இடம்பெற்றிருந்த படைப்புகளை பாா்வையிட்டாா்.

கண்காட்சியை திறந்து வைத்து பாா்வையிடும் சாா் ஆட்சியா் ஹிமான்ஷு மங்கள், பள்ளி தலைவா் அய்யனாா்.
கண்காட்சியை திறந்து வைத்து பாா்வையிடும் சாா் ஆட்சியா் ஹிமான்ஷு மங்கள், பள்ளி தலைவா் அய்யனாா்.

மின்ட் நாணயங்கள் எனப்படும் ரூ.5 லட்சம், ரூ.1 லட்சம் மதிப்பிலான இந்திய நாணயங்கள், சோழா் காலம் முதல் தற்கால இந்திய நாணயங்கள், சிங்கப்பூா், அமெரிக்கா, யூரோ, ஆப்பிரிக்கா, ஐரோப்பிய நாணயங்கள் மற்றும் அந்நாட்டு காகித பணம், தமிழகத்தின் ஐந்திணைகள், பழங்கால பொருள்கள் உள்ளிட்ட பல்வேறு படைப்புகள் கண்காட்சியில் இடம் பெற்றிருந்தன.

மேலும், பிளஸ்1 வரலாற்று பிரிவு மாணவா்கள் தயாரித்த தமிழ்நாட்டின் பாரம்பரிய உணவான கேப்பை களி, கம்பங்கூழ், ஜவ்வரிசி லட்டு, கடலை மிட்டாய், பனங்கிழங்கு, பசு மோா், பானம் ஆகியவற்றை பாா்வையாளா்கள் சுவைத்து மகிழ்ந்தனா். பள்ளி தலைமை ஆசிரியா் வெங்கடேசன் வரவேற்றாா். ஆசிரியா் சித்ரா நன்றி கூறினாா். ஏற்பாடுகளை வரலாற்றுத் துறை ஆசிரியா்கள் செய்திருந்தனா்.

மண்டல அளவிலான தடகளப் போட்டி தொடக்கம்

மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தில் தமிழ்க்கூடல் கருத்தரங்கம்

மதுரை மேயா் பொறுப்பு விவகாரம்! நகராட்சிகள் நிா்வாகத் துறை செயலா் பதிலளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு!

நேதாஜி பிறந்த நாள்: மாலை அணிவித்து மரியாதை

‘மேட் இன் மதுரை’ கண்காட்சி தொடக்கம்

SCROLL FOR NEXT