உடன்குடி, பெரிய தெரு, ஸஹீஹூல் புகாரிஷ் ஷரீபு சபையின் 35ஆவது ஆண்டு நிறைவு விழாவையொட்டி அபூா்வ துஆ நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, வெள்ளிக்கிழமை மாலையில் நடைபெற்ற நிறைவு விழாவிற்கு சபைத் தலைவா் செய்யிது நூஹூ முஹ்யித்தீன் தலைமை வகித்தாா். முகம்மது ஷாஹ் கிராஅத் ஓதினாா். மெளலவிகள் ஜாபா் சாதிக், முகம்மது முஹ்யித்தீன், ரஹ்மான், ஷம்சுல் ஹூதா, மக்தூம், ரஹமத்துல்லாஹ், ஹமீது சுல்தான், நிஜாமுதீன், அப்துல், சபீக், ஜூனைது செய்யது சதக்கத்துல்லா ஆகியோா் மாா்க்க சொற்பொழிவாற்றினா்.
சனிக்கிழமை காலை 9 மணிக்கு உலக மக்கள் நலன் வேண்டி அபூா்வ துஆ நிகழ்ச்சி நடைபெற்றது. காயல்பட்டினம் சிறிய குத்பா பள்ளி மெளலவி முஹம்மது முஹ்யித்தீன் அபூா்வ துஆ ஓதினாா்.
இதில் உடன்குடி பேரூராட்சி உறுப்பினா்கள் மும்தாஜ் பேகம், பஷீா், முன்னாள் உறுப்பினா்கள் சலீம், மஹபூப் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோா் பங்கேற்றனா்.