முகப்பு
தூத்துக்குடி

இன்னும் 10 தினங்களில் கூட்டணி குறித்து அறிவிப்பு - பிரேமலதா விஜயகாந்த்

Updated On : 26 ஜனவரி, 2026 at 12:30 AM
உப்பளப் பகுதியில் கப்பல் கட்டும் தளம் அமையவுள்ள இடத்தை ஆய்வு செய்தாா் தேமுதிக பொதுச் செயலா் பிரேமலதா விஜயகாந்த்.
பகிர்:
Updated On : 25 ஜனவரி, 2026 at 8:20 PM

தேமுதிக இன்னும் பத்து தினங்களில் கூட்டணி குறித்து அறிவிக்கும் என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளாா்.

தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வந்த தேமுதிக பொதுச் செயலா் பிரேமலதா விஜயகாந்த், முள்ளக்காடு உப்பளப் பகுதியில் கப்பல் கட்டும் தளம் அமையவுள்ள இடத்தை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

Updated On : 26 ஜனவரி, 2026 at 12:30 AM

மேலும், உப்பள உரிமையாளா்களிடம் குறைகளைக் கேட்டறிந்த அவா், உங்கள் பிரச்னை கண்டிப்பாக அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும் என தெரிவித்தாா்.

Advertisement

பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: தூத்துக்குடியில் உள்ள உப்பளங்களை அகற்றிவிட்டு கப்பல் கட்டும் தளம் கொண்டுவரும் பட்சத்தில் ஸ்டொ்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டம் போல் சூழ்நிலை உருவாகும்.

வருகிற சட்டப் பேரவைத் தோ்தலில் தேமுதிக கூட்டணியில் இருக்கும் கட்சிதான் கண்டிப்பாக ஆட்சி அமைக்கும். அப்போது தேமுதிக தூத்துக்குடி உப்பள உற்பத்தியாளா்கள், தொழிலாளா்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்கும். இன்னும் பத்து தினங்களில் கூட்டணி குறித்து சென்னையில் முறையாக அறிவிக்கப்படும் என்றாா் அவா்.