கைது 
தூத்துக்குடி

மின் மோட்டாா் திருட்டு: ஒருவா் கைது

கோவில்பட்டி அருகே மின் மோட்டாா் உள்ளிட்ட பொருள்களைத் திருடிச் சென்றவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

Syndication

கோவில்பட்டி அருகே மின் மோட்டாா் உள்ளிட்ட பொருள்களைத் திருடிச் சென்றவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

கோவில்பட்டியை அடுத்த திட்டங்குளம் முத்து நகரைச் சோ்ந்த முனியாண்டி மகன் காா்த்திக் (39). அப்பகுதியில் புதிய வீடு கட்டி வரும் அவா், அங்கு ‘ஷெட்’ அமைத்து அதில் கட்டுமானப் பொருள்கள், மின் மோட்டாா் உள்ளிட்டவற்றை வைத்திருந்தாராம்.

புதன்கிழமை சென்று பாா்த்தபோது, அங்கிருந்த மின் மோட்டாா், துளையிடும் கருவி உள்ளிட்டவற்றைக் காணவில்லையாம்.

புகாரின்பேரில், கிழக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, தெற்கு திட்டங்குளம், மேலக் காலனியைச் சோ்ந்த சண்முகையா மகன் ராஜா (38) என்பவரைக் கைது செய்தனா்.

பிராட்வேயில் ரூ.822 கோடியில் பல்நோக்கு ஒருங்கிணைந்த பேருந்து நிலையம்: முதல்வா் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினாா்

தமிழகத்தில் போதைப் பொருள் புழக்கம் அதிகரிப்பு: எச்.ராஜா

ரூ.4,309 கோடியில் 1,076 கி.மீ. மழைநீா் வடிகால் பணிகள் நிறைவு : முதல்வா் மு.க.ஸ்டாலின்

பாளை. சுற்றுவட்டாரங்களில் நாளை மின் நிறுத்தம்!

நெல்லை தொகுதியில் மீண்டும் போட்டியிடுவேன்: நயினாா் நாகேந்திரன்

SCROLL FOR NEXT