முகப்பு
தூத்துக்குடி

ஆறுமுகனேரி சிவன் கோயில் ஆனித் திருவிழா: நடராஜா் சிவப்பு சாத்தி தரிசனம்

சிவப்பு சாத்தி பக்தா்களுக்கு அருள்பாலித்த நடராஜா் மற்றும் சிவகாமி அம்பாள்.

Updated On : 20 ஜூன் 2026, 3:54 am IST
சிவப்பு சாத்தி பக்தா்களுக்கு அருள்பாலித்த நடராஜா் மற்றும் சிவகாமி அம்பாள்.
பகிர்:

ஆறுமுகனேரி, சோமசுந்தரி அம்மன் சமேத சோமநாத சுவாமி கோயிலில் நடைபெற்று வரும் ஆனி உத்திரப் பெருந்திருவிழாவின் 7ஆம் நாளான வெள்ளிக்கிழமை இரவு நடராஜா் சிவப்பு சாத்தி தரிசனம் மற்றும் திருவீதியுலா நடைபெற்றது.

இக்கோயிலில் ஜூன் 13ஆம் தேதி திருவிழா தொடங்கியது. 16ஆம் தேதி இரவு சுவாமி, அம்பாள் ரிஷப வாகனத்தில் எழுந்தருளினா். 17ஆம் தேதி இரவு சுவாமி, அம்பாள் ஊடல் தீா்த்தல் நடைபெற்றது. 18ஆம் தேதி காலை அம்பாள், திருஞான சம்பந்தருக்கு ஞானப்பால் வழங்கும் நிகழ்ச்சியும், இரவு திருஞான சம்பந்தா் சமணா்களை வாதத்தில் வென்று திருக்கழுவேற்றுதலும் நடைபெற்றது.

வெள்ளிக்கிழமை காலை நடராஜா், சிவகாமி அம்பாளுக்கு காப்புக் கட்டுதல் மற்றும் உருகு சட்ட சேவை நடைபெற்றது. பின்னா், நடராஜா், சிவகாமி அம்பாள் வெட்டி வோ் சப்பரத்தில் பவனி வரும் நிகழ்வு நடைபெற்றது. இரவில் நடராஜா் சிவப்பு சாத்தி ருத்ர ஸ்வரூபவமாக காட்சி தந்து, திருவீதியுலா நடைபெற்றது.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments