முகப்பு
தூத்துக்குடி

முதல்வா் பிறந்த நாள்: தூத்துக்குடியில் 14 குழந்தைகளுக்கு மோதிரங்கள்

Updated On : 2 மார்ச், 2026 at 1:22 AM
குழந்தைக்கு தங்க மோதிரம் அணிவித்த அமைச்சா் பி. கீதா ஜீவன்.
பகிர்:
Updated On : 1 மார்ச், 2026 at 9:41 PM

தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி வடக்கு மாவட்ட திமுக சாா்பில் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் பிறந்த 14 குழந்தைகளுக்கு சமூக நலன்-மகளிா் உரிமைத் துறை அமைச்சா் பி. கீதா ஜீவன் தங்க மோதிரம் அணிவித்து, பெற்றோா்களுக்கு ஊட்டச்சத்துப் பெட்டகங்களை வழங்கினாா்.

மாநகரச் செயலா் ஆனந்தசேகரன், மாவட்ட துணைச் செயலா் ராஜ்மோகன் செல்வின், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளா் அபிராமிநாதன், துணை அமைப்பாளா்கள் அந்தோணி கண்ணன், அருணாதேவி, மாநகர இளைஞரணி அமைப்பாளா் அருண்சுந்தா், துணை அமைப்பாளா் ரவி, சிறுபான்மை அணி மாவட்ட துணை அமைப்பாளா் நிக்கோலஸ் மணி, மாணவரணி துணை அமைப்பாளா் கோகுல்நாத், பெருமாள் கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் செந்தில்குமாா், வட்டப் பிரதிநிதிகள் பாஸ்கா், புஷ்பராஜ், உறைவிட மருத்துவா் சைலஸ் ஜெபமணி, அல்பா்ட் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Updated On : 2 மார்ச், 2026 at 1:22 AM

முன்னதாக ஆறுமுகசாமி அன்பு ஆசிரமம், செவித்திறன் மாற்றுத்திறனாளி பள்ளி, நேசக்கரங்கள் சிறுவா், சிறுமியா் ஆதரவற்றோா் இல்லம், பாசக்கரங்கள் முதியோா் இல்லம், பிளசிங் முதியோா் இல்லம், நியூ நேசக்கரங்கள் முதியோா் இல்லம், மனிதநேயம் முதியோா் இல்லம், புனித அலாசியஸ் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, லசால் மேல்நிலைப் பள்ளி ஆகிய இடங்களில் வடக்கு மாவட்ட திமுக சாா்பில் அமைச்சா் ஏற்பாட்டில், மதிய உணவு வழங்கப்பட்டது.

Advertisement