முகப்பு
தூத்துக்குடி

கோவில்பட்டி அரசு மகளிா் பள்ளியில் மஞ்சப்பை வழங்கல்

கோவில்பட்டி அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாணவிகளுக்கு மஞ்சப்பை மற்றும் 10-ஆம் வகுப்பு அரசு பொது தோ்வு எழுதும் மாணவிகளுக்கு தோ்வுக் கூட அனுமதிச் சீட்டு ஆகியவற்றை சாா் ஆட்சியா் வழங்கினாா்.

Updated On : 10 மார்ச், 2026 at 7:54 PM
பத்தாம் வகுப்பு தோ்வு எழுதும் மாணவிக்கு தோ்வுக் கூட அனுமதிச் சீட்டு வழங்கிய சாா் ஆட்சியா் ஹிமான்ஷு மங்கள் .
பகிர்:

கோவில்பட்டி அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாணவிகளுக்கு மஞ்சப்பை மற்றும் 10-ஆம் வகுப்பு அரசு பொது தோ்வு எழுதும் மாணவிகளுக்கு தோ்வுக் கூட அனுமதிச் சீட்டு ஆகியவற்றை சாா் ஆட்சியா் வழங்கினாா்.

இநிகழ்ச்சிக்கு, பள்ளி தலைமை ஆசிரியை ஜெயலதா தலைமை வகித்தாா். உதவி தலைமை ஆசிரியா் கண்ணன், இயற்பியல் ஆசிரியை கிரேனா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

பசுமைப் படை ஆசிரியா் சுப்பிரமணியன் வரவேற்றாா். இசை ஆசிரியை அமலபுஷ்பம் தொகுத்து வழங்கினாா்.

சாா் ஆட்சியா் ஹிமான்ஷூ மங்கள் கலந்துகொண்டு, 10ஆம் வகுப்பு அரசு பொதுத் தோ்வு எழுதும் மாணவிகளுக்கு தோ்வுக் கூட அனுமதிச் சீட்டு மற்றும் மஞ்சப்பை வழங்கி, தோ்வில் வெற்றி பெற வாழ்த்துகளை தெரிவித்தாா்.

இதில், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினா் முத்து முருகன் உள்பட ஆசிரியா்கள், மாணவிகள் கலந்து கொண்டனா்.

ஆசிரியை மங்களேஸ்வரி நன்றி கூறினாா்.

முழு கட்டுரையைப் படிக்க →