சாலை விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு
தூத்துக்குடியில் இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் தொழிலாளி உயிரிழந்தாா்.
தூத்துக்குடி மாவட்டம், சாயா்புரம் பி.எஸ். கோயில் தெருவைச் சோ்ந்த நாராயணசாமி மகன் வீரபாகு என்கிற கண்ணன் (46). கூட்டாம்புளி முத்துநகரைச் சோ்ந்த வேல்கனி மகன் பிச்சைமணி (60). கட்டுமான தொழிலாளிகளான இருவரும் வெள்ளிக்கிழமை பிற்பகல், இருசக்கர வாகனத்தில் மடத்தூா் புறவழிச்சாலையில் சென்று கொண்டிருந்தபோது, லாரி மோதி விழுந்தனராம். லாரியின் பின்பக்க சக்கரம் இருவா் மீதும் ஏறியதாம்.
இதில் பலத்த காயமடைந்த இருவரையும் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா்.
பின்னா், மேல் சிகிச்சைக்காக கண்ணனை திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து சிப்காட் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.