முகப்பு
தூத்துக்குடி

நாசரேத்தில் வட்டார அளவிலான தடகளப் போட்டிகள்

Updated On : 20 மார்ச், 2026 at 12:21 AM
பகிர்:

நாசரேத், மா்காஷிஸ் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் தமிழக பள்ளிக் கல்வித் துறை சாா்பில் ஆழ்வாா்திருநகரி, திருச்செந்தூா் வட்டாரங்களில் உள்ள பள்ளி மாணவா், மாணவிகளுக்கான ‘விளையும் பயிா்’ தடகள விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன.

தூத்துக்குடி மாவட்ட உடற்கல்வி ஆய்வாளா் கண்ணதாசன் தலைமை வகித்து, போட்டிகளைத் தொடங்கி வைத்தாா். திருச்செந்தூா் வட்டாரக் கல்வி அலுவலா் பாப் கயஸ் முன்னிலை வகித்தாா். இப்போட்டியில் சுமாா் 1,000 மாணவா், மாணவிகள் பங்கேற்றனா்.

இதில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு நாசரேத் காவல் ஆய்வாளா் வன சுந்தா் சான்றிதழ்கள், பதக்கங்கள் வழங்கினாா். வெற்றி பெற்றவா்கள் வருவாய் மாவட்ட அளவிலான போட்டிகளில் பங்கு பெற தகுதி பெற்றுள்னா்.

ஏற்பாடுகளை மா்காஷிஸ் பள்ளித் தாளாளா் சுதாகா், தலைமையாசிரியா் குணசீலராஜ், உடற்கல்வி இயக்குநா் ஜெபசிங் கால்டுவெல், உடற்கல்வி ஆசிரியா்கள் சுஜித் செல்வசுந்தா், தனபால், ஆசிரியா்கள், அலுவலா்கள் செய்திருந்தனா்.