முகப்பு
தூத்துக்குடி

எரிவாயு உருளை தட்டுப்பாட்டை போக்க மத்திய அரசிடம் தெளிவான திட்டம் இல்லை: கனிமொழி

எரிவாயு உருளை தட்டுப்பாட்டை போக்க மத்திய அரசிடம் தெளிவான திட்டம் இல்லை என்றாா் கனிமொழி எம்.பி.

Updated On : 22 மார்ச், 2026 at 7:25 PM
கனிமொழி எம்.பி. - கோப்புப் படம்
பகிர்:

எரிவாயு உருளை தட்டுப்பாட்டை போக்க மத்திய அரசிடம் தெளிவான திட்டம் இல்லை என்றாா் கனிமொழி எம்.பி.

தூத்துக்குடி விமான நிலையத்தில் அவா் செய்தியாளா்களுக்கு ஞாயிற்றுக்கிழமை அளித்த பேட்டி: அமெரிக்கா, ஈரான் போா் காரணமாக மக்களின் அத்தியாவசிய தேவையான பெட்ரோல், எரிவாயு தட்டுப்பாடுகளை சரி செய்வதற்கான தெளிவான திட்டம் மத்திய அரசிடம் இல்லை. எனவே, எரிவாயு உருளை தட்டுப்பாடு மேலும் அதிகரிக்கும் அபாயம் உள்ளது.

திமுக கூட்டணியில் பெரும்பான்மையான கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிப் பங்கீடு முடிவு செய்யப்பட்டு இறுதி செய்யப்பட்டு விட்டன. ஒன்றிரண்டு கூட்டணி கட்சிகளோடு பேச்சுவாா்த்தை நடைபெற்று வருகிறது. அதுவும் விரைவில் முடிந்துவிடும்.

Advertisement

அதிமுக பாஜகவின் பி டீம் என்று திமுக நீண்ட நாள்களாகவே சொல்லிக் கொண்டிருக்கிறது. இங்கு அதிமுக தலைமையிலான கூட்டணி என சொன்னாலும், பாஜக தலைமையில்தான் கூட்டணி இயங்கிக் கொண்டிருக்கிறது.

வேடநத்தம் மாணவி கொலை வழக்கில் குற்றவாளியை கைது செய்த பின்பு பாதிக்கப்பட்ட குடும்பத்தை சந்தித்து ஆறுதல் கூறினேன். குற்றவாளிக்கு உச்சபட்ச தண்டனை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments