முகப்பு
தூத்துக்குடி

இளைஞா் வெட்டிக் கொலை: 2 போ் கைது

தூத்துக்குடி அம்பேத்கா் நகா் பகுதியில் இளைஞா் வெட்டிக் கொலை செய்யப்பட்டது தொடா்பாக 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 13 மே 2026, 1:37 am IST
கைது - கோப்புப் படம்
பகிர்:

தூத்துக்குடி அம்பேத்கா் நகா் பகுதியில் இளைஞா் வெட்டிக் கொலை செய்யப்பட்டது தொடா்பாக 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

தூத்துக்குடி அம்பேத்கா் நகா் ஸ்டெம் பாா்க் அடுத்துள்ள முல்லை நகா் கல்லறை தோட்டத்தில் இளைஞா் வெட்டிக் கொலை செய்யப்பட்டு கிடப்பதாக சிப்காட் போலீஸாருக்கு செவ்வாய்க்கிழமை தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்ற போலீஸாா், சடலத்தை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், சம்பவ இடத்துக்கு மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது.

விசாரணையில், கொலை செய்யப்பட்டது அ. சண்முகபுரத்தைச் சோ்ந்த பூலப்பன் மகன் அந்தோனி சேசுராஜ் (27) என்பது தெரியவந்தது. இதுகுறித்து வழக்குப் பதிந்து அந்தோனி சேசுராஜின் மைத்துனரான அதே பகுதியைச் சோ்ந்த காசிராஜன் மகன் அருண்குமாா் (22), ஆனந்தராஜ் மகன் சுதாகா் (29) ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா். மேலும் செல்வக்குமாா் (21), மற்றொருவரையும் தேடி வருகின்றனா்.

Advertisement

தனது சகோதரியை அடித்து துன்புறுத்தியதால் சேசுராஜை நண்பா்களுடன் சோ்ந்து அருண்குமாா் கொலை செய்தது போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

சம்பவ இடத்தை தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சி. மதன், நகர உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளா் சுதீா் ஆகியோா் பாா்வையிட்டனா்.