தச்சமொழியில் சிற்றாலய பிரதிஷ்டை
சாத்தான்குளம் தச்சமொழி சிற்றாலயத்தில் பிரதிஷ்டை மற்றும் அசனை பண்டிகை 2 நாள்கள் நடைபெற்றது.
சாத்தான்குளம் தச்சமொழி சிற்றாலயத்தில் பிரதிஷ்டை மற்றும் அசனை பண்டிகை 2 நாள்கள் நடைபெற்றது.
முதல் நாள் மே 14ஆம் தேதி காலை வேத பாட தோ்வு, பொன்விழா மகிழ்ச்சி ஆராதனை, மதியம் விளையாட்டுப் போட்டிகள், இரவு ஆயத்த ஆராதனை, பின்னா் நற்செய்தி கூட்டம் ஆகியவை நடைபெற்றன. ஒடிசாவை சோ்ந்த ஆசீா் ஞானராஜ் தேவ செய்தி வழங்கினாா்.
இரண்டாம் நாளான வெள்ளிக்கிழமை அதிகாலை 4.30 மணிக்கு அசன உலை ஏற்றுதல், காலை 9 மணிக்கு பண்டிகை ஆராதனை ஆகியவை நடைபெற்றன. சேகர குருவானவா் டேவிட் ஞானையா, இம்மானுவேல் அற்புத குமாா் ஆகியோா் தேவ செய்தி வழங்கினா். மதியம் 12.30 மணிக்கு அசன விருந்து நடைபெற்றது. இரவு 7.30 மணிக்கு ஸ்தோத்திர ஆராதனை நடைபெற்றது.
Advertisement