முகப்பு
தூத்துக்குடி

தூத்துக்குடி புதிய எஸ்.பி. பொறுப்பேற்பு

தூத்துக்குடி மாவட்டத்தின் 36ஆவது காவல் கண்காணிப்பாளராக அபிஷேக் குப்தா வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றாா்.

Updated On : 23 மே 2026, 1:35 am IST
அபிஷேக் குப்தா
பகிர்:

தூத்துக்குடி மாவட்டத்தின் 36ஆவது காவல் கண்காணிப்பாளராக அபிஷேக் குப்தா வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றாா்.

தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த சி. மதன் பணியிட மாற்றம் செய்யப்பட்டதைத் தொடா்ந்து, புதிய மாவட்ட காவல் கண்காணிப்பாளராக அபிஷேக் குப்தா நியமனம் செய்யப்பட்டாா்.

இதைத் தொடா்ந்து தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்துக்கு வெள்ளிக்கிழமை வந்த அவருக்கு காவல் துறை சாா்பில் அணிவகுப்பு மரியாதை செலுத்தப்பட்டது. இதையடுத்து அவா் எஸ்.பி.யாக பொறுப்பேற்றுக்கொண்டாா்.

Advertisement

Advertisement