முகப்பு
திருச்சி

திருத்துறைப்பூண்டியில் குற்றப் பிரிவு தொடங்கப்படுமா?

திருத்துறைப்பூண்டி, ஆக. 9: திருத்துறைப்பூண்டி நகரில் தொடர்ந்து அதிகரித்து வரும் கொள்ளை, திருட்டுச் சம்பவங்களைக்  கட்டுப்படுத்தவும், கண்டறியவும் காவல் துறையில் குற்றப் பிரிவு தனியாக தொடங்கப்பட வேண்டும்

Updated On : 27 டிசம்பர், 2023 at 5:03 PM
பகிர்:

திருத்துறைப்பூண்டி, ஆக. 9: திருத்துறைப்பூண்டி நகரில் தொடர்ந்து அதிகரித்து வரும் கொள்ளை, திருட்டுச் சம்பவங்களைக்  கட்டுப்படுத்தவும், கண்டறியவும் காவல் துறையில் குற்றப் பிரிவு தனியாக தொடங்கப்பட வேண்டும் என்று இந்தப் பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

     திருவாரூர் மாவட்டத்தில் வளர்ந்து வரும் நகரமான திருத்துறைப்பூண்டியில் காவல் துணைக் கண்காணிப்பாளர் அலுவலகம், வட்ட ஆய்வாளர் அலுவலகம், நகரக் காவல் நிலையம் ஆகியன அமைந்துள்ளன.

    வட்டார அளவிலான காவல் நிலையம் தொடங்கும் அளவுக்கு மக்கள்தொகை இருந்தபோதிலும், இங்கு வட்டார காவல் நிலையம் தொடங்கப்படவில்லை.

     காவல் துணைக் கண்காணிப்பாளராகப் பணிபுரிந்து வந்த பாலகிருஷ்ணன், கன்னியாகுமரிக்கு மாறுதலாகி மூன்று மாதங்களுக்கும் மேலாகிறது. தற்போதுவரையில் அந்தப் பணியிடம் நிரப்பப்படாமலேயே உள்ளது.

காவலர்கள் பற்றாக்குறை: பொதுவாகவே, திருத்துறைப்பூண்டி பகுதி சட்டம் - ஒழுங்கு பிரச்னைகள், மத மோதல்கள், அரசியல் கட்சியினர் இடையேயான மோதல்கள் அதிகம் நடைபெறும் பகுதியாக உள்ளதால், அந்த பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதே காவல் நிலையத்தில் உள்ள போலீஸôருக்கு பெரிய வேலையாக அமைந்து விடுகிறது.  சம்பவம் நடைபெற்ற பகுதியில் மேலும் மோதல் ஏற்படாமல் தடுக்க, தொடர்ந்து கூடுதல் போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்படுகிறது.

       இதுமட்டுமன்றி, முக்கியப் பிரமுகர்கள் வருகை, நீதிமன்றப் பணிகள், மருத்துவமனை புறக்காவல் நிலையப் பணிகள் உள்ளிட்ட பணிகளுக்கும் போலீஸôர் அனுப்பப்படுவதால், குற்றங்களைக் கண்டறியும் பணிக்கு போலீஸôர் இன்றி தவிக்கும் நிலை உள்ளது.

அதிகரித்து வரும் கொள்ளைகள்: போலீஸôரின் நிலையைத் தங்களுக்குச்   சாதகமாக்கிக் கொண்டு, அண்மைக்காலமாக நகரில் தொடர்ந்து கொள்ளைச் சம்பவங்களை குற்றவாளிகள் அரங்கேற்றி வருகின்றனர்.

   வங்கியிலிருந்து விவசாயி எடுத்து வந்த | 1.10 லட்சம் கொள்ளை, நெல் வியாபாரி வாகனத்தில் எடுத்து வந்த | 9 லட்சம் வழிப்பறி, கடையின் கூரையை பிரித்து | 80 ஆயிரம் கொள்ளை போன்றவை அண்மையில் நடைபெற்ற சம்பவங்களாகும்.

சங்கிலித் தொடராய் திருட்டு: கொள்ளைச் சம்பவங்களுக்கு சற்றும் சளைத்ததல்ல திருட்டுச் சம்பவங்கள் என்பதுபோல சங்கிலித் தொடராய் திருட்டுகளும் நடைபெற்று வருகின்றன. இரு சக்கர  வாகனங்கள் திருட்டு, பேருந்து நிலையத்தில் தங்கச் சங்கிலி திருட்டு போன்ற சம்பவங்கள் தொடர்கின்றன.

     கொள்ளை, திருட்டுச் சம்பவங்கள் தொடர்பாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டாலும், போலீஸôர் பற்றாக்குறையால் வழக்குகளுக்கு தீர்வுகள் கிடைக்கவில்லை.

      திருத்துறைப்பூண்டியின் நிலையைக் கருத்தில் கொண்டே, கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னரே குற்றப் பிரிவுக்கென தனியாக ஆய்வாளர், உதவி ஆய்வாளர், 2 தலைமைக் காவலர்கள், 6 காவலர்களைக் கொண்ட தனிப் பிரிவினர் செயல்பட்டு வந்தனர். இவர்கள் குற்ற நிகழ்வுகளை உடனுக்குடன் கண்டுபிடிப்பதுடன், குற்றப் பின்னணி கொண்டவர்களைத் தொடர் கண்காணிப்பிலும் வைத்திருந்தனர்.

     இதுமட்டுமல்லாது, குற்றத்தின் தன்மை, செய்யப்பட்ட விதம் ஆகியவற்றைக் கொண்டே குற்றவாளிகள் யாராக இருப்பர் என்பதைக் கணிக்கும் திறன் பெற்றவர்களாக அவர்கள் இருந்தனர். குற்றப் பிரிவினர் வேறு பணிக்குச் செல்லாமல் செயல்பட்டதாலேயே குற்றங்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்தது. மேலும், குற்றவாளிகளும் உடனுக்குடன் கண்டுபிடிக்கப்பட்டனர். ஆனால், என்ன காரணத்தினாலோ நாளடைவில் குற்றப் பிரிவு கலைக்கப்பட்டது.

      குற்றப் பிரிவு கலைக்கப்பட்டதில் இருந்தே குற்றச் செயல்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வந்துள்ளது. இதில் போலீஸôரை குறை சொல்வதிலும் நியாயம் இல்லை. சட்டம் - ஒழுங்குப் பிரிவில் பணி இல்லாதபோதுதான், குற்றம் சம்பந்தப்பட்ட வழக்குகளில் அவர்களால் கவனம் செலுத்த முடியும் என்ற நிலையே நீடிக்கிறது.    

     மாவட்ட அளவில் குற்றப் பிரிவு என்று உள்ளபோதிலும், அவர்கள் மாவட்ட நிலையில் நடைபெறும் முக்கியச்  சம்பவங்களுக்கே முன்னுரிமை கொடுக்க வேண்டிய நிலையில் உள்ளனர்.

     எனவே, திருத்துறைப்பூண்டியில் அதிகரித்து வரும் கொள்ளை, திருட்டுச் சம்பவங்களை கருத்தில் கொண்டு, முன்னர்  செயல்பட்டது போன்ற குற்றப் பிரிவை ஓர் ஆய்வாளர் தலைமையில் மீண்டும் உருவாக்கி, நகரில் நடைபெறும் குற்றங்களைக் களையவும், குற்றங்கள் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கவும்  வேண்டும் என்பதே இந்தப் பகுதி பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →