திருச்சி

கால்​நடை தீவ​னங்​கள் விலை உயர்​வால் பால் உற்​பத்​தி​யா​ளர்​கள் தவிப்பு

திருச்சி, மே 16: கடந்த 8 மாதங் க ளில் பால் உற் பத் திக் குத் தேவை யான கால் நடை தீவ னங் க ளின் விலை கடு மை யாக உயர்ந் துள்ள நிலை யி லும், கொள் மு தல் விலை உயர்த் தப் ப டா த தால் பால் உற் பத் தி யா ளர்

கு. வைத்திலிங்கம்

திருச்சி, மே 16: கடந்த 8 மாதங் க ளில் பால் உற் பத் திக் குத் தேவை யான கால் நடை தீவ னங் க ளின் விலை கடு மை யாக உயர்ந் துள்ள நிலை யி லும், கொள் மு தல் விலை உயர்த் தப் ப டா த தால் பால் உற் பத் தி யா ளர் கள் பரி த வித்து வரு கின் ற னர்.

தமி ழ கத் தில் கிரா மப் பு றங் கள் மற் றும் நகர்ப் பு றங் க ளில் உள்ள பால் உற் பத் தி யா ளர் க ளி ட மி ருந்து தங் க ளுக் குத் தேவை யான அளவு பாலை ஆவின் நிறு வ ன மும், தனி யார் பால் உற் பத்தி நிறு வ னங் க ளும் கொள் மு தல் செய்து வரு கின் றன.

இது வரை ஆவின் நிறு வ னத் துக்கு பால் வழங்கி வந்த பால் உற் பத் தி யா ளர் கள், கால் நடை தீவ னங் க ளின் விலை உயர்வு, உயர்த் தப் ப டாத கொள் மு தல் விலை போன்ற கார ணங் க ளால் தனி யா ருக்கு பாலை வழங் கு வ தற் குத் தயா ராகி வரு கின் ற னர்.

ஆவின் நிறு வ னத் துக்கு வழங் கப் ப டும் பாலில் 4.5 சத கொழுப்பு சத் தும், 8.5 சத இதர சத் து க ளும் கொண்ட பசும் பாலுக்கு லிட் ட ருக்கு ரூ. 15.88 - ம், 7.5 சத கொழுப்பு சத் தும், 8.5 சத இதர சத் து க ளும் கொண்ட எரு மைப் பால் லிட் ட ருக்கு ரூ. 24.28-ம் கொள் மு தல் விலை யாக பால் உற் பத் தி யா ளர் க ளுக்கு அர சால் வழங் கப் பட்டு வரு கி றது.

ஆனால், கடந்த 8 மாதங் க ளுக்கு மேலாக கால் நடை தீவ னங் க ளின் விலை கடு மை யாக உயர்ந்து வரு வ தால், தங் க ளுக்கு வழங் கப் ப டும் பால் கொள் மு தல் விலையை உயர்த்தி வழங்க வேண் டும் என்று அர சுக்கு அவர் கள் கோரிக்கை விடுத் துள் ள னர்.

விலை உயர் வால் பாதிப்பு: 2009, செப் டம் பர் மாதம் பால் கொள் மு தல் விலையை அரசு உயர்த்தி அறி விப்பு வெளி யிட் டது. ஆனால், அதன் பின் னர் வைக் கோல், புண் ணாக்கு போன்ற கால் நடை தீவ னங் க ளின் விலை தாறு மா றாக உய ரத் தொடங் கி யி ருக் கி றது என் கின் ற னர் பால் உற் பத் தி யா ளர் கள்.

ரூ. 100-க்கு விற் பனை செய் யப் பட்ட வைக் கோல் தற் போது ரூ. 200 ஆக வும், சோளக் கட்டு ரூ. 150-லிருந்து ரூ. 300 ஆக வும் உயர்ந் துள் ளது.

இது போல ஒரு கிலோ தவிடு ரூ. 5.50- லிருந்து ரூ. 8 ஆக வும், கட லைப் புண் ணாக்கு ஒரு கிலோ ரூ. 27-லிருந்து ரூ. 32 ஆக வும், கலப் புத் தீவ னங் கள் கிலோ ரூ. 10-லிருந்து ரூ. 12.50 ஆக வும் விலை உயர்ந் துள் ளது. இவ் வாறு எல் லாப் பொருள் க ளின் விலை யும் உயர்ந் த தால் என்ன செய் வ தென்று தெரி யா மல் தவித்து வரு கின் ற னர் பால் உற் பத் தி யா ளர் கள்.

பால் கொள் மு தல் விலையை உயர்த் தா மல் இதே நிலை தொடர்ந் தால் இருக் கிற மாடு களை விற் பனை செய் து விட்டு வேறு வேலைக்கு செல் லக் கூ டிய நிலை ஏற் பட்டு விடும் என்று தெரி விக் கின் ற னர் பால் உற் பத் தி யா ளர் கள்.

கொள் மு தல் விலையை உயர்த்த வேண் டும்: தமி ழ கத் தின் அண்டை மாநி லங் க ளில் பால் விலையை உயர்த் தா மல் பால் கொள் மு தல் விலையை மட் டும் அந் தந்த மாநில அர சு கள் உயர்த்தி உள் ளன.

பால் விற் பனை விலையை உயர்த் தா மல் கொள் மு தல் விலை புதுச் சே ரி யில் லிட் ட ருக்கு ரூ. 2.50 வரை யி லும், கேர ளத் தில் ரூ. 3 வரை யி லும் உயர்த் தப் பட் டுள் ளது.

கர் நா டக மாநி லத் தில் கூட் டு றவு பால் உற் பத்தி நிலை யங் கள் தங் க ளுக்கு பால் வழங்கி வரும் பால் உற் பத் தி யா ளர் க ளுக்கு இரண்டு முறை ஊக் கத் தொகை யை யும் வழங் கி யுள் ளது.

எனவே, மற்ற மாநி லங் க ளைப் போல தமி ழ கத் தி லும் பால் விலையை உயர்த் தா மல் பால் கொள் மு தல் விலையை உயர்த்தி வழங்க வேண் டும் என் கி றார் தமிழ் நாடு பால் உற் பத் தி யா ளர் கள் நலச் சங் கத் தின் மாநில இணைச் செய லர் என். கணே சன்.

பால் கொள் மு த லும் குறை கி றது? : தின மும் 2.80 லட் சம் லிட் டர் முதல் 2.90 லட் சம் லிட் டர் வரை பால் கொள் மு தல் செய்து வந்த ஆவின் நிறு வ னத் துக்கு, 50,000 லிட் டர் வரை பால் கொள் மு தல் குறைந் துள் ள தாக பால் உற் பத் தி யா ளர் கள் தெரி விக் கின் ற னர். இதற்கு கொள் மு தல் விலை உய ரா மல் கால் நடை தீவ னங் க ளின் விலை உயர்ந் தது, தற் போது நில வி வ ரும் கடு மை யான வெப் பத் தால் மாடு கள் பால் சுரக் கும் அளவு குறைந்து வரு வது போன் றவை கார ணங் க ளாக உள் ளன என் றும் அவர் கள் தெரி விக் கின் ற னர்.

தனி யா ருக்கு மாறும் நிலை யில் பால் உற் பத் தி யா ளர் கள்: அரசு வழங்கி வரும் கொள் மு தல் விலை யைக் காட் டி லும் தனி யார் பால் நிறு வ னங் கள் லிட் ட ருக்கு ரூ. 18 வரை விலை நிர் ண யித்து வழங்கி வரு வ தால் பல இடங் க ளில், ஆவின் நிறு வ னத் துக்கு பால் வழங் கு வதை நிறுத் திக் கொண்டு, தனி யார் நிறு வ னங் க ளுக்கு வழங் கும் முடி வில் கிரா மப் பு றங் க ளைச் சேர்ந்த பால் உற் பத் தி யா ளர் கள் இருப் ப தா கக் கூறப் ப டு கி றது.

அரசு பால் விலையை உயர்த்தி வழங் கும். அவ ச ரப் பட வேண் டாம். நல்ல முடிவு வரும் வரை காத் தி ருக் க லாம் என்ற கருத்தை, தனி யா ருக்கு பால் வழங் கும் நிலை யில் உள்ள உற் பத் தி யாள் ர க ளி டம் எடுத் து ரைத்து வரு கி றது பால் உற் பத் தி யா ளர் சங் கங் கள். தனி யார் பால் நிறு வ னங் கள் லிட் ட ருக்கு ரூ. 18 வரை பால் கொள் மு தல் செய் வ தற்கு உத் த ர வி டும் அரசு, ஏன் அந்த விலையை பால் உற் பத் தி யா ளர் க ளுக்கு வழங் கக் கூடாது என் றும் அவர் கள் கேள்வி எழுப் பு கின் ற னர்.

பால் நிறுத் தும் போராட் டம்: பால் கொள் மு தல் விலையை உயர்த்தி வழங்க வேண் டும் எனக் கோரி, திங் கள் கி ழமை முதல் (மே 17) பால் உற் பத் தியை நிறுத் தும் போராட் டத்தை மேற் கொள் ள வும் பால் உற் பத் தி யா ளர் கள் நலச் சங் கம் முடிவு செய் துள் ளன. இத னால், பால் தட் டுப் பாடு ஏற் படும் சூழல் நில வு கி றது. எனவே, அரசு உட ன டி யாக பால் கொள் மு தல் விலையை உயர்த்தி வழங்க வேண் டும் என பால் உற் பத் தி யா ளர் கள் கோரிக்கை விடுத் துள் ள னர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரூ.590 கோடி முறைகேடு: ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் வங்கியின் பங்குகள் 20% சரிவு!

வெளியானது இறுதி வாக்காளர் பட்டியல் | செய்திகள்: சில வரிகளில் | 23.02.26

இறுதி வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லையா? மீண்டும் விண்ணப்பிக்கலாம்!

ஹெட்மேயர், ரோவ்மன் பௌவல் அதிரடி: ஜிம்பாப்வேவுக்கு 255 ரன்கள் இலக்கு!

நாளை நல்ல முடிவை அறிவிப்பேன் : சசிகலா

SCROLL FOR NEXT