திருச்சி

கும்பகோணம் ரயில் நிலைய கால அட்டவணை வெளியீடு

கும்பகோணம், நவ. 25:   கும்பகோணம் ரயில் நிலையத்திற்கு வந்து செல்லும் ரயில்களின் நேரம் குறித்த கால அட்டவணை வெளியிடப்பட்டது.   குடந்தை அனைத்துத் தொழில் வணிகர் சங்க கூட்டமைப்பு மற்றும் ரயில் பயணிகள் நலச்ச

தினமணி

கும்பகோணம், நவ. 25:   கும்பகோணம் ரயில் நிலையத்திற்கு வந்து செல்லும் ரயில்களின் நேரம் குறித்த கால அட்டவணை வெளியிடப்பட்டது.

  குடந்தை அனைத்துத் தொழில் வணிகர் சங்க கூட்டமைப்பு மற்றும் ரயில் பயணிகள் நலச்சங்கம் சார்பில், ரயில் பயணிகள் நலன் கருதி, கும்பகோணம் ரயில் நிலையத்திற்கு வந்து செல்லும் ரயில்களின் நேரம் குறித்த அட்டவணையை ரயில் உபயோகிப்பாளர்களுக்கு இலவசமாக அளிக்கும் விதமாக கால அட்டவணை அண்மையில் வெளியிடப்பட்டது.

  கால அட்டவணையை குடந்தை அனைத்துத் தொழில் வணிகர் சங்க கூட்டமைப்பு தலைவர் அடியான் செட்டியார் வெளியிட, குடந்தை மருந்து வணிகர் சங்கத் தலைவர் சிவராம கிருஷ்ணன், குடிநீர் மற்றும் குளிர்பானம் விற்பனையாளர்கள் நலச்சங்கத் தலைவர் சந்திரபிரபு ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

   இதற்கான ஏற்பாடுகளை கூட்டமைப்பு செயலர் சத்தியநாராயணன் செய்திருந்தார்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நடிகையிடம் கேட்கப்பட்ட கேள்வி! நடிகர் கிச்சா சுதீப் செய்த செயல்!

மேற்கு வங்க எஸ்ஐஆர் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு! 58 லட்சம் பெயர்கள் நீக்கம்!

சென்னையில் தமிழ்நாடு ஹஜ் இல்லம்: முதல்வர் ஸ்டாலின் அடிக்கல்!

ஆஷஸ்: ஆஸி. பிளேயிங் லெவன் அறிவிப்பு! கடைசிப் போட்டியின் நாயகன் நெசருக்கு இடமில்லை!

தங்கம் விலை குறைந்தது! இன்றைய நிலவரம்!

SCROLL FOR NEXT