திருச்சி

திருச்சி காங். கூட்டம் வெளிப்படுத்திய சவால்?

திருச்சி, அக். 10: திருச்சியில் சோனியா பங்கேற்ற காங்கிரஸ் விழாவை, திருநாவுக்கரசரின் ஆதரவாளர்கள் இணையும் விழா என்றுதான் தொடக்கத்தில் அறிமுகப்படுத்தினர். அதன்பின் "காங்கிரஸ் கட்சியின் 125-வது ஆண்டு விழா

சா. ஜெயப்பிரகாஷ்

திருச்சி, அக். 10: திருச்சியில் சோனியா பங்கேற்ற காங்கிரஸ் விழாவை, திருநாவுக்கரசரின் ஆதரவாளர்கள் இணையும் விழா என்றுதான் தொடக்கத்தில் அறிமுகப்படுத்தினர். அதன்பின் "காங்கிரஸ் கட்சியின் 125-வது ஆண்டு விழா' என்றனர். பிறகு "4-வது முறையாக கட்சியின் தலைவராக சோனியா தேர்வு செய்யப்பட்டதற்கு பாராட்டு விழா' என்றனர். அதன்பிறகு, "ராஜீவ்காந்தியின் பிறந்த நாள் விழா' என்றனர்.

  முடிவில் மேடையில் எழுதப்பட்டவை அக்கட்சியின் 125-வது ஆண்டு விழாவும், ராஜீவ்காந்தியின் பிறந்த நாளும் மட்டுமே.

  திருச்சி மாநகரின் வேறெந்த பகுதியிலும் சனிக்கிழமை (அக். 9) பெரிய அளவிலான நெரிசல் ஏற்படவில்லையானாலும், பொதுக் கூட்டம் நடைபெற்ற மன்னார்புரம் ராணுவத் திடல் முழுவதும் மனிதக் கூட்டமே நிரம்பியிருந்தது. நிச்சயமாக மகளிர் சுய உதவிக்குழுவினர் திரட்டி வரப்படவில்லை.

   இதுவரை வீடுகளில் அடைந்துக் கிடந்த பழைய காங்கிரஸ்காரர்கள், புதிதாக இளைஞர் காங்கிரஸில் இணைந்தவர்கள் எல்லோரும் வரிந்துகட்டிக் கொண்டு வந்திருந்தனர். திருச்சி மக்கள் கொஞ்சம் வாயடைத்துப் போய் இருக்கிறார்கள் என்பது உண்மைதான்.

   "நம்முடைய லட்சியத்தை அடையும் நாள் வெகுதொலைவில் இல்லை என்பதை இந்தக் கூட்டம் நிரூபிக்கிறது. ...யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல என்பதை உணர்த்தும் கூட்டம் இது. ...பிற கட்சிகளின் வெற்றி, தோல்வியை நிர்ணயிக்கும் கட்சி என்ற நிலையை மாற்றி, தமிழ்நாட்டின் முதல் இயக்கமாக காங்கிரûஸ வளர்ப்போம்.' என்றார் மத்திய அமைச்சர் வாசன்.

  "காங்கிரஸ் கட்சியின் வலிமையை யாருக்காவது(!) உணர்த்த வேண்டுமென்றால் இந்தக் கூட்டமே அதை வெளிப்படுத்தும்.

  உங்களின் (சோனியா) திட்டங்களைத் தமிழகத்திலும் நிறைவேற்ற எங்களுக்கு வாய்ப்பு வர வேண்டும் என்று விரும்புகிறோம். எங்களுக்கு மட்டுமே என்று சொல்லவில்லை. எங்களுக்கும்(?) வேண்டும் என்றுதான் விரும்புகிறோம். இந்தியாவை வழிநடத்தும் நீங்கள், தமிழ்நாட்டையும் வழிநடத்த வேண்டும்' என விளக்கினார் சிதம்பரம்.

  உள்துறையைப் பொறுப்பில் வைத்திருக்கும் ஒரு முக்கிய நபர், சோனியாவின் முன்னிலையில், பிரம்மாண்டமான மக்கள் திரளின் முன்னால் வெளிப்படையாக இப்படிப் பேசியது கவனிக்கத்தக்கது.

  இவர்களுக்கெல்லாம் முன்பே பேசிமுடித்துச் சென்ற திருநாவுக்கரசர் வெளிப்படையாகவே போட்டு உடைத்தார். "இந்தத் தேர்தலில் கூட்டணி ஆட்சி, அடுத்த தேர்தலில் காங்கிரஸ் ஆட்சி என சபதமேற்போம்' என்றார். புதிய தலைவர் என்பதாலோ என்னவோ இவரது இந்த வரிகள் பெரிதாகவில்லை.

   சென்னை விமான நிலையத்தில் கருணாநிதி, ஸ்டாலின், தயாநிதி மாறன் ஆகியோர் வரவேற்க, திருச்சி விமான நிலையத்தில் கனிமொழி வரவேற்க- விழா மேடைக்கு வந்திருந்த சோனியாவின் பேச்சு முக்கியமானது. திமுகவுடனான கூட்டணி பற்றிய விஷயத்தை மிகச் சில சொற்களில் முடித்துக் கொண்டார்.

  "தமிழ்நாட்டில் கூட்டணியில் இருக்கிறோம். அந்தக் கூட்டணியை மதிக்கிறோம்'- அவ்வளவே. இந்த இரு வரிகளிலும் திமுக என்ற பெயர் கூட இல்லை.

   அதேபோல, 2004 தேர்தலில் 40-க்கு 40 தொகுதிகளையும் வென்றதைக் குறிப்பிட்டார், அதற்காக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மக்களுக்கு நன்றி தெரிவிப்பதாகக் குறிப்பிட்டார். இந்த இரு வரிகளிலும் திமுக இல்லை.

   அதேநேரத்தில், தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியின் தனித்துவத்தைப் பற்றி வலியுறுத்தும்போதும், "தனித்துவத்தை இழக்காமல் பணியாற்ற வேண்டும்' என்றுதான் குறிப்பிட்டார். கவனத்துடன் கட்டமைக்கப்பட்ட, நாகரீகம் மிக்கவையாக சோனியாவின் சொற்கள் தெரிகின்றன.

  மொத்தத்தில் இந்த பிரம்மாண்டமும், சோனியாவின் வருகையும் காங்கிரஸ் கட்சிக்கு ஊக்கத்தையும், உற்சாகத்தையும் அளித்திருக்கிறது என்று சொன்னால் அது மிகையில்லை. திமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளையும் கூர்ந்து உற்றுநோக்க வைத்திருக்கிறது என்றாலும் அதில் மிகையில்லை.

  சோனியாவும்கூட மேடையிலிருந்து இறங்கி வந்தவர், உற்சாகமாய் தடுப்புக் கட்டைகளில் ஏறி ஏறி எல்லோரையும் பார்த்து கையசைத்தார். பாதுகாப்புப் படையினரின் பாடு படாதபாடாகிவிட்டது. காருக்குள் சென்று கதவை மூடிக் கொண்டவர், என்ன நினைத்தாரோ தெரியவில்லை மீண்டும் கதவைத் திறந்து காரில் நின்றவாறே கூட்டத்தைப் பார்த்து கையசைத்தார்.  பேச வேண்டியவற்றைப் பேச வேண்டும், எந்த இடத்திலும் உணர்ச்சிவயப்பட்டு சொற்களைக் கொட்டி விடக் கூடாது என்று கூடிப் பேசி, திட்டமிட்டு பேசியதைப் போலத் தெரிகிறது எல்லோரின் பேச்சும். அதனால்தானோ என்னவோ, ஈவிகேஎஸ். இளங்கோவன் பேசவில்லை (!?).

  என்ன சொல்கிறது தில்லி வட்டாரம்?

  "இப்போது பந்து எங்களின் திடலுக்குள் இருக்கிறது. விளையாட வேண்டியது நாங்கள்தான். மேற்கு வங்கம், அசாம் மாநிலங்களில் இளைஞர் காங்கிரஸ் தேர்தல் நடைபெறுகிறது. பிகாரில் சட்டப்பேரவைத் தேர்தல். இவற்றில்தான் ராகுல் கவனம் செலுத்துகிறார்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

போலீஸாருக்கு எஸ்.பி. பாராட்டு

நெல்லையில் இளைஞருக்கு அரிவாள் வெட்டு

பழங்கனாங்குடியில் ரூ.1.50 கோடியில் புதிய பாலம் கட்ட அடிக்கல்

வெள்ளை யானை வாகனத்தில் இரணியம்மன்

திருவானைக்காவல் கோயிலில் தோ்கள் வெள்ளோட்டம்! அம்மன் தேரின் அச்சாணி மீண்டும் பழுது!

SCROLL FOR NEXT