திருச்சி

அரியலூர் நகராட்சியில் உருவாக்கப்படாத புதிய பணியிடங்கள்

அரியலூர், டிச. 13: மூன்றாம் நிலை நகராட்சி நிலையிலிருந்து இரண்டாம் நிலை நகராட்சியாகத் தரம் உயர்த்தப்பட்டும், அரியலூர் நகராட்சியில் அதற்குரிய பணியிடங்கள் உருவாக்கப்படவில்லை. எனவே, இதற்குரிய பணியிடங்களை

கு. வைத்திலிங்கம்

அரியலூர், டிச. 13: மூன்றாம் நிலை நகராட்சி நிலையிலிருந்து இரண்டாம் நிலை நகராட்சியாகத் தரம் உயர்த்தப்பட்டும், அரியலூர் நகராட்சியில் அதற்குரிய பணியிடங்கள் உருவாக்கப்படவில்லை. எனவே, இதற்குரிய பணியிடங்களை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கை பொதுமக்களின் சார்பில் வலியுறுத்தப்பட்டு வருகிறது.

  1943 ஆம் ஆண்டில் இரண்டாம் நிலை ஊராட்சியாக இருந்து, பின்னர் 1955-ல் முதல்நிலை ஊராட்சியானது அரியலூர் ஊராட்சி. இதைத் தொடர்ந்து, கடந்த 1966 ஆம் ஆண்டில் தேர்வு நிலை பேரூராட்சியாகத் தரம் உயர்ந்து, கடந்த 2004 ஆம் ஆண்டு வரை அந்த நிலை தொடர்ந்து நீடித்தது.

  இந்த நிலையில், கடந்த 2004 ஆம் ஆண்டில் அப்போதைய அதிமுக அரசின் அறிவிப்பு காரணமாக, பேரூராட்சியாக இருந்து அரியலூர், சிறப்பு நிலை ஊராட்சியாகத் தரம் குறைக்கப்பட்டது. மாவட்டத் தலைநகர் அமைந்துள்ள பகுதியில் சிறப்பு நிலை ஊராட்சி அமைவதா என்ற பொதுமக்களின் எதிர்ப்பின் காரணமாக, அரியலூர் மூன்றாம் நிலை நகராட்சியாகத் தரம் உயர்த்தப்பட்டு செயல்பட்டு வந்தது.

  இதைத் தொடர்ந்து, கடந்த 2010 ஆம் ஆண்டில் அப்போதைய திமுக அரசு, நகராட்சி நிர்வாகத்தின் செயல்பாட்டின் காரணமாக, மூன்றாம் நிலையிலிருந்து அரியலூர் நகராட்சியை இரண்டாம் நிலை நகராட்சியாகத் தரம் உயர்த்தி, அதற்கான அரசாணையை வெளியிட்டது. ஆனால், தரம் உயர்த்தப்பட்டு ஓராண்டாகியும், இரண்டாம் நிலை நகராட்சிக்குரிய பணியிடங்கள் உருவாக்கப்படாமல் இருக்கிறது.    இரண்டாம் நிலை நகராட்சிக்குரிய மேலாளர் ஒருவர், காசாளர், கணக்காளர், இளநிலை உதவியாளர், வருவாய் ஆய்வாளர், தட்டச்சர், அலுவலக உதவியாளர், நகராட்சிப் பொறியாளர், பணி மேற்பார்வையாளர், ஓட்டுநர், நகரமைப்பு ஆய்வாளர், 15 சுகாதாரப் பணியாளர்கள் என பல்வேறு பணியிடங்கள்  ஏற்படுத்தப்படாமலேயே உள்ளது. இது ஏன் என்று தெரியவில்லை என்ற கருத்து பொதுமக்கள் மத்தியில் எழுப்பப்பட்டு வருகிறது.

   நகராட்சியில் பணியிடங்கள் உருவாக்கப்படாமல் இருப்பதால், பொதுமக்களின்  அன்றாட மற்றும் அத்தியாவசியப் பணிகளை உடனடியாக மேற்கொள்ள முடியாமல் இருக்கிறது. நகராட்சிப் பகுதியில் புதிதாக வீடு கட்டுபவர்களுக்கு குறைந்த நேரத்தில் நகராட்சி நிர்வாகத்தில் அனுமதி வழங்க முடியாத நிலை இருக்கிறது.  இதுகுறித்து தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சர், நகராட்சி நிர்வாக ஆணையருக்கு கோரிக்கை மனுவை அனுப்பியுள்ளேன். விரைவில் நடவடிக்கை எடுப்பார்கள் எனக் கருதுகிறேன் என்கிறார் அரியலூர் நகராட்சியின் மதிமுக உறுப்பினரும், நகர்மன்றத் துணைத் தலைவருமான ம. மலர்க்கொடி.

  மேலும், இரண்டாம் நிலை நகராட்சிக்குரிய தகுதியை அரியலூர் பெற்றிருந்தாலும், மின்சாரம் சம்பந்தப்பட்ட பழுதுகளை நீக்குவதற்கு உதவியாளர்கள், குடிநீர் தொடர்பான பிரச்னைகளை கவனிப்பதற்கு உதவியாளர், ஆய்வாளர் போன்ற பணியிடங்கள் காலியாக உள்ளன. மக்கள் நலன் கருதி, இந்தக் காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்றும், இதற்குரிய நடவடிக்கையை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்றும் அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளேன் என்றார் அவர்.

   மாவட்டத் தலைநகரில் உள்ள மக்களின் பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டிய வகையில் உள்ள நகராட்சி, தரம் உயர்ந்த நிலையில் இருந்தாலும், அங்கு அதற்குரிய பணியிடங்கள் உருவாக்கப்படாமல் இருப்பது நகர மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

   அரியலூர் இரண்டாம் நிலை நகராட்சிக்குரிய புதிய பணியிடங்களை உருவாக்க மாநில அரசும், நகராட்சி நிர்வாகமும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதே அரியலூர் நகர மக்களின் எதிர்பார்ப்பாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மெக்சிகோவில் போதைப் பொருள் கடத்தல் மன்னன் என்கவுன்டர்! ஆதரவாளர்கள் வன்முறை!

தேர்தலுக்குப் பின்பே ஜன நாயகன்?

பொன்னமராவதி அருகே ஜல்லிக்கட்டுப் போட்டி

கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்வி

தவெக ஆட்சி அமைந்தால்.... விஜய்யின் வாக்குறுதிகள்!

SCROLL FOR NEXT