முகப்பு
திருச்சி

இலவச பொது மருத்துவ முகாம்

ஆலங்குடி, ஜன. 8: ஆலங்குடி அருகேயுள்ள கொத்தமங்கலத்தில் இலவச பொது மருத்துவ முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.   மருத்துவ முகாமில் திருவரங்குளம் ஒன்றியக் குழுத் தலைவர் கே.பி.கே. தங்கவேலு   பங்கேற்று, 15 பய

Updated On : 28 டிசம்பர், 2023 at 4:04 PM
பகிர்:

ஆலங்குடி, ஜன. 8: ஆலங்குடி அருகேயுள்ள கொத்தமங்கலத்தில் இலவச பொது மருத்துவ முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

  மருத்துவ முகாமில் திருவரங்குளம் ஒன்றியக் குழுத் தலைவர் கே.பி.கே. தங்கவேலு   பங்கேற்று, 15 பயனாளிகளுக்கு உதவித் தொகைகளை வழங்கினார்.

  முகாமுக்கு, ஊராட்சி மன்றத் தலைவர் த. ராமலிங்கம், ஒன்றியக் குழு உறுப்பினர் சிவசாமி, கூட்டுறவு சங்க முன்னாள் இயக்குநர் லோகநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

  முகாமில் வட்டார மருத்துவ அலுவலர் சி. சீனிவாசன் தலைமையிலான  மருத்துவர்கள் 1120 பேருக்கு பரிசோதனை மேற்கொண்டு, அதில் தேவையானோருக்கு சிகிச்சை அளித்து மருந்து, மாத்திரைகளை வழங்கினர்.

முழு கட்டுரையைப் படிக்க →