முகப்பு
திருச்சி

பள்ளபட்டி உழவர் சந்தையில் 184 டன் காய்கறிகள் விற்பனை

அரவக்குறிச்சி, ஜன. 8: கரூர் மாவட்டம், பள்ளபட்டி உழவர் சந்தையில் டிசம்பர் மாதத்தில் 184 டன் காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன என்றார் வேளாண் துணை இயக்குநர் (வணிகம்) டி.வி. ரவி.   இதுகுறித்து அவர் மேல

Updated On : 28 டிசம்பர், 2023 at 4:04 PM
பகிர்:

அரவக்குறிச்சி, ஜன. 8: கரூர் மாவட்டம், பள்ளபட்டி உழவர் சந்தையில் டிசம்பர் மாதத்தில் 184 டன் காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன என்றார் வேளாண் துணை இயக்குநர் (வணிகம்) டி.வி. ரவி.

  இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:

  பருவநிலை மாற்றத்தின் காரணமாக காய்கறிகளின் விலை மிக அதிகமாக இருந்த போதிலும், கரூர் மாவட்டம், பள்ளபட்டி உழவர் சந்தையில் குறைந்த விலையில் தரமான காய்கறிகள் விற்பனை செய்யப்படுகின்றன.

   இதன்காரணமாக, கடந்த மாதத்தில் (டிசம்பர் 2010) இந்த உழவர் சந்தையில் | 39 லட்சம் மதிப்புள்ள 184 டன் காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இந்தப் பகுதி மக்களிடையே உழவர் சந்தை நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

   மேலும், இந்தப் பகுதி விவசாயிகள் இயற்கை விவசாயம் மூலம் காய்கறிகளை உற்பத்தி செய்தால், சந்தையில் நல்ல வரவேற்பும், லாபமும் கிடைக்கும். விவசாயிகளுக்கு உழவர் சந்தையில் காய்கறிகள் விற்பனை செய்ய புதிய அடையாள அட்டை வழங்கப்பட்டு வருகிறது. இந்த வாய்ப்பை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார் அவர்.

முழு கட்டுரையைப் படிக்க →