மாநில அளவிலான கபடிப் போட்டி: புதுகை மாணவர்கள் 4 பேருக்கு தங்கம்
புதுக்கோட்டை, ஜன. 8: தமிழ்நாடு விளையாட்டு முன்னேற்றக் கழகம் சார்பில், மாநில அளவில் நடைபெற்ற கபடிப் போட்டியில், புதுக்கோட்டை அருகேயுள்ள நார்த்தாமலை பி.எஸ்.கே. மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 4 ப
திருச்சிமாநில அளவிலான கபடிப் போட்டி: புதுகை மாணவர்கள் 4 பேருக்கு தங்கம்
புதுக்கோட்டை, ஜன. 8: தமிழ்நாடு விளையாட்டு முன்னேற்றக் கழகம் சார்பில், மாநில அளவில் நடைபெற்ற கபடிப் போட்டியில், புதுக்கோட்டை அருகேயுள்ள நார்த்தாமலை பி.எஸ்.கே. மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 4 ப
புதுக்கோட்டை, ஜன. 8: தமிழ்நாடு விளையாட்டு முன்னேற்றக் கழகம் சார்பில், மாநில அளவில் நடைபெற்ற கபடிப் போட்டியில், புதுக்கோட்டை அருகேயுள்ள நார்த்தாமலை பி.எஸ்.கே. மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 4 பேர் தங்கம் வென்றனர்.
சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான கபடிப் போட்டியில் 14, 17 வயதுக்கு உள்பட்டோருக்கான பிரிவில் இந்தப் பள்ளி மாணவர்கள் ஆர். பரத்குமார், பி. செல்வவிநாயகம், ஆர். அரவிந்தசாமி, எம். லோகேஷ் ஆகியோர் பங்கேற்று தங்கப் பதக்கம் வென்றனர்.
இந்த மாணவர்களை பள்ளித் தாளாளர் பி. கருப்பையா, நிர்வாகி க. கமலா, பெற்றோர் - ஆசிரியர் கழகத் தலைவர் ஸ்டீபன், உடல் கல்வி ஆசிரியர் இளங்கோவன் ஆகியோர் பாராட்டினர்.
கல்லூரி விரிவுரையாளரிடம் நகைப் பறிப்பு
புதுக்கோட்டை, ஜன. 8: புதுக்கோட்டையில் வெள்ளிக்கிழமை மொபெட்டில் சென்ற பெண் விரிவுரையாளரிடம் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் நகையைப் பறித்துச் சென்றனர்.
புதுக்கோட்டை பெரியார் நகரைச் சேர்ந்த கணபதி மகள் உமாமகேஸ்வரி (27). இவர் கைக்குறிச்சியில் உள்ள தனியார் கல்லூரியில் விரிவுரையாளராகப் பணி புரிந்து வருகிறார்.
இந்நிலையில், நிஜாம் காலனியில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு சென்று விட்டு, மொபெட்டில் திரும்பி வந்து கொண்டிருந்தாராம். அப்போது, பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள், உமாமகேஸ்வரி அணிந்திருந்த 3.5 சவரன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்றனராம்.
இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில், கணேஷ் நகர் போலீஸôர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.