முகப்பு
திருச்சி

திமுக கூட்டணிக்கு இசை வேளாளர் சங்கம் முழு ஒத்துழைப்பு

கும்பகோணம், மார்ச் 25: தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணிக் கட்சிகள் அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற முழு ஒத்துழைப்பைப் தருவது என இசை வேளாளர் சங்கத்தில் தீர்மானிக்கப்பட்டது.    கும்பகோணம் இசை வேளாள

Updated On : 20 செப்டம்பர் 2012, 8:49 am IST
பகிர்:

கும்பகோணம், மார்ச் 25: தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணிக் கட்சிகள் அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற முழு ஒத்துழைப்பைப் தருவது என இசை வேளாளர் சங்கத்தில் தீர்மானிக்கப்பட்டது.

   கும்பகோணம் இசை வேளாளர் சங்கச் செயற்குழுக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது.

   கூட்டத்தில், தமிழகத்தில் மக்களுக்காகவும், அரசு அலுவலர்களுக்காகவும், பிற்படுத்தப்பட்டோருக்காவும், அனைத்து சமுதாயத்தினருக்காவும், தன்னுடைய முதுமையிலும் இளமையாகப் பணியாற்றி வரும் முதல்வர் கருணாநிதி மீண்டும் முதல்வராகப் பொறுப்பேற்றிட, குடந்தை தொகுதி வேட்பாளர் க. அன்பழகனை வெற்றி பெறச் செய்வது, தமிழகத்தில் திமுக கூட்டணிக் கட்சிகள் அனைத்துத் தொகுதிகளிலும் வெற்றி பெற முழு ஒத்துழைப்பைத் தருவது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Advertisement

   சங்க ஆலோசகர் கே.டி. கதிரவன்பாலு தலைமை வகித்தார். ஆர். மோகன்காந்தி, கே. சுந்தரம், டி. அசோக்,பிச்சையப்பா, கல்யாணசுந்தரம், மோகன், முருகதாஸ், முருகானந்தம், சுரேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இசை வேளாளர் சங்கத் தலைவர் விக்கீஸ் எஸ். சரவணன் நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.