திருச்சி

கரூரில் பேட்டரி, இன்வெர்ட்டர்களுக்கு தட்டுப்பாடு

கரூர், பிப்.15:  மின் தட்டுப்பாட்டைச் சமாளிக்க தொழில் நிறுவனங்கள் இன்வெர்ட்டர் வாங்குவதால், கரூர் நகரில் பேட்டரி, இன்வெர்ட்டர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.   தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்

கே.விஜயபாஸ்கா்

கரூர், பிப்.15:  மின் தட்டுப்பாட்டைச் சமாளிக்க தொழில் நிறுவனங்கள் இன்வெர்ட்டர் வாங்குவதால், கரூர் நகரில் பேட்டரி, இன்வெர்ட்டர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.  

தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு நாள்தோறும் 2 மணி நேர மின் தடை இருந்தது. ஆனால், தற்போது 8 முதல் 10 மணி நேரம் வரை மின் தடை ஏற்படுகிறது.

கரூர் நகரைப் பொருத்தவரையில் பகலில் 8 மணி நேரமும், இரவில் 2- 3 மணி நேரமும் மின் தடை செய்யப்படுகிறது. மேலும், பராமரிப்புப் பணிகள் என்று கூறி, ஒவ்வொரு பகுதியாக நாள் முழுவதும் மின் விநியோகம் தடை செய்யப்படுகிறது.

இந்த மின் தடையால், ஜெனரேட்டர் பயன்படுத்தாத சிறிய பனியன் நிறுவனங்கள், தையல் கூடங்களில் முழுமையாக உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலைவாய்ப்பையும், வருவாயையும் இழக்கும் சூழல் உருவாகியுள்ளது.

தொழில் துறை மட்டுமன்றி விவசாயம், மக்களின் வாழ்க்கைச் சூழல், தேர்வுக்கு தயாராகும் மாணவர்களின் கல்வி நிலை என அனைத்தும் மின் தடையால் பாதிக்கப்பட்டுள்ளது.

இதனால் வீடுகள், அலுவலகங்கள், கடைகள், சிறு தொழில்கூடங்களில் இன்வெர்ட்டரை பெருமளவில் பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர்.

குறிப்பாக, வீடுகள், கடைகளுக்கான இன்வெர்ட்டர்களின் தேவை பல மடங்கு உயர்ந்துள்ளது. இதனால், கரூர் நகரிலுள்ள கடைகளில் இன்வெர்ட்டர் விற்பனை 10 மடங்குக்கு மேல் உயர்ந்துள்ளதாகவும், கடந்த ஒரு வாரமாக இன்வெர்ட்டர் வாங்க வருபவர்களிடம், 50 சதத் தொகையை முன் பணமாக வாங்கிக் கொண்டு 10 நாள்களுக்குப் பிறகு வரச்சொல்வதாக விநியோகஸ்தர்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து கரூர்-கோவை சாலையில் உள்ள இன்வெர்ட்டர் விநியோகஸ்தர் கே. சுப்பிரமணியன் கூறியது:

மின் சக்தியை சேமித்து அளிக்கும் இன்வெர்ட்டர்கள் 250 வோல்ட்ஸ் முதல் 100 கிலோ வோல்ட்ஸ் வரை உள்ளன. இவை குறைந்தபட்சம் ரூ.10,000 முதல் ரூ.30 லட்சம் வரை விற்பனை செய்யப்படுகிறது. பெரும்பாலும் வீடுகளில் மின் தடை நேரத்தில் 2 ட்யூப் லைட், 2 மின்விசிறி, ஒரு தொலைக்காட்சி ஆகியவற்றை சுமார் 10 மணி நேரம் வரை பயன்படுத்த 800 வோல்ட்ஸ் திறன் கொண்ட இன்வெர்ட்டர்கள் போதுமானது. அதன் விலை 20 ஆயிரம் ரூபாய்.

மின் தடை அதிகரிப்பால் கடந்த 2 மாதங்களாக இந்த 800 வோல்ட்ஸ் திறன் இன்வெட்டர்களின் விற்பனை 10 மடங்குக்கு மேல் உயர்ந்துள்ளது. இந்த வகை இன்வெர்ட்டர் நாளொன்றுக்கு சுமார் 100 விற்பனையாகிறது. எனினும், மக்களின் தேவைக்கு ஏற்ப உற்பத்தி இல்லாததால், முன் பதிவு செய்து விற்பனை செய்யப்படுகிறது என்றார் அவர்.

கரூர்-திண்டுக்கல் சாலையில் உள்ள இன்வெர்ட்டர் விநியோகஸ்தர் எஸ்.அண்ணாமலை கூறியது:

இன்வெர்ட்டர் பேட்டரி சார்ஜ் ஏற 10 முதல் 12 மணி வரை தொடர்ந்து மின்சாரம் இருக்க வேண்டும். தொடந்து 4 மணி நேரம் கூட மின்சாரம் விநியோகம் இருப்பதில்லை. மேலும், புதிதாக வாங்கும் பேட்டரிகளை பயன்படுத்தும் முன்பு 24 மணி நேரம் சார்ஜ் ஏற்ற வேண்டும். அதற்கும் வாய்ப்பில்லை. இன்வெர்ட்டரை வாங்கிச்செல்பவர்கள் சார்ஜ் போட்டு வைத்து விடுகின்றனர், மின்சாரம் நிறுத்தப்பட்டவுடன் உரிய அளவு சார்ஜ் ஏறாமல் குறைவான சக்தியில் இயங்குவதால், பேட்டரியும், இன்வெர்ட்டர்களும் பழுதடைந்துவிடுகின்றன. இதனால், பல்வேறு பிரச்னைகளை நாங்கள் சந்திக்க வேண்டியுள்ளது.  இந்த நடைமுறைகளுக்கு சம்மதம் தெரிவிப்பவர்களுக்கு மட்டுமே, இன்வெர்ட்டர்களை விற்பனை செய்கிறோம் என்றார் அவர்.

கரூர் நகரில் பெரிய வணிக வளாகங்களில் பல சிறு தொழில் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.

இந்த வணிக வளாக உரிமையாளர்கள், கடைகளின் மின்தேவையைக் கணக்கிட்டு நாள்தோறும் ரூ.75 முதல் ரூ.125 வரை ஒவ்வொரு கடைக்கும் வசூல் செய்து, ஜெனரேட்டர் மூலம் மின்சாரம் வழங்குகின்றனர். இந்தச் செலவை சமாளிக்க முடியாத தொழில் நிறுவனங்கள் பெரும்பாலானவை இன்வெர்ட்டர் வாங்க முடிவு செய்துள்ளதால், இப்போது கரூர் நகரில் இன்வெர்ட்டர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிலம்பரசனை இயக்கும் டியூட் இயக்குநர்?

உலக கிரிக்கெட்டில் இந்தியா ஆதிக்கம் செலுத்த விரும்புகிறேன்: ஸ்மிருதி மந்தனா

மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்!

தொகுதிப் பங்கீடு; இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியுடன் திமுக பேச்சுவார்த்தை!

சமந்தாவின் மா இன்டி பங்காரம் வெளியீட்டுத் தேதி!

SCROLL FOR NEXT