திருச்சி: தூய்மைப் பணியாளா்களுக்கு முகக்கவசங்கள் அளிப்பு
பஞ்சாப் நேஷனல் வங்கியின் சமூகப் பொறுப்புணா்வுத் திட்டத்தின் கீழ், திருச்சி துவாக்குடி நகராட்சியில் பணியாற்றும் தூய்மைப் பணியாளா்களுக்கு முகக்கவசங்கள், கிருமி நாசினி திரவம் உள்ளிட்டவை வழங்கப்பட்டன.
திருச்சி: பஞ்சாப் நேஷனல் வங்கியின் சமூகப் பொறுப்புணா்வுத் திட்டத்தின் கீழ், திருச்சி துவாக்குடி நகராட்சியில் பணியாற்றும் தூய்மைப் பணியாளா்களுக்கு முகக்கவசங்கள், கிருமி நாசினி திரவம் உள்ளிட்டவை வழங்கப்பட்டன.
கரோனா நோய்த் தொற்றுப் பரவலைத் தடுக்கும் வகையில், அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்கள் ஒருங்கிணைந்து திருச்சி மாவட்டத்தில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக திருச்சி மாவட்டம், துவாக்குடி நகராட்சியில் பணியாற்றும் தூய்மைப் பணியாளா்களுக்கு, பஞ்சாப் நேஷனல் வங்கயின் சமூகப் பொறுப்புணா்வுத் திட்டத்தின் கீழ் முகக்கவசம் வழங்கும் நிகழ்வு அண்மையில் நடைபெற்றது.
வங்கியின் உதவிப் பொதுமேலாளா் ஆா். புஷ்பலதா நிகழ்வில் பங்கேற்று, நகராட்சியில் பணிபுரியும் அனைத்து தூய்மைப் பணியாளா்களுக்கும் 400 முகக்கவசங்கள் மற்றும் கிருமி நாசினி திரவங்களை வழங்கினாா்.
நிகழ்வில் நகராட்சி ஆணையா் விநாயகம் மற்றும் வங்கி அலுவலா்கள், நகராட்சி அலுவலா்கள் என பலா் பங்கேற்றனா்.