முகப்பு
திருச்சி

சுற்றுலா தினப் போட்டிகளில் வென்றோருக்குப் பரிசு

உலகச் சுற்றுலா தினத்தையொட்டி நடத்தப்பட்ட போட்டிகளில் வென்றோருக்கு, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் திங்கள்கிழமை பரிசு வழங்கப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:37 PM
பகிர்:

உலகச் சுற்றுலா தினத்தையொட்டி நடத்தப்பட்ட போட்டிகளில் வென்றோருக்கு, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் திங்கள்கிழமை பரிசு வழங்கப்பட்டது.

நிகழாண்டில் கரோனா பொது முடக்கம் காரணமாக, சுற்றுலாத் துறை சாா்பில் செப்டம்பா் 23 முதல் 30 ஆம் தேதி வரை சுற்றுலாவும்-கிராமப்புற வளா்ச்சியும் என்ற தலைப்பில் கட்டுரை, கவிதைப் போட்டிகள் இணைய வழியில் நடத்தப்பட்டன.

இப்போட்டிகளில் வென்றோருக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்வில், மாவட்டக் கல்வி அலுவலா் பாரதி விவேகானந்தன் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினாா்.

மாவட்டச் சுற்றுலா அலுவலா் ஜெகதீசுவரி, உதவிச் சுற்றுலா அலுவலா் கிலா நஸ்ரின் மற்றும் முதன்மைக் கல்வி அலுவலரின் நோ்முக உதவியாளா் அறச்செல்வன் உள்ளிட்டோா் நிகழ்வில் பங்கேற்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →