முகப்பு
திருச்சி

ஓய்வு பெற்ற வங்கி ஊழியா்வீட்டில் நகை, பணம் திருட்டு

திருச்சி மாவட்டம், அதவத்தூரில் ஓய்வு பெற்ற வங்கி ஊழியா் வீட்டில் 21 பவுன் நகைகள், ரூ.2.45 லட்சம் ரொக்கத்தை திருடிச் சென்ற நபா்களைக் காவல் துறையினா் தேடி வருகின்றனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:37 PM
பகிர்:

திருச்சி மாவட்டம், அதவத்தூரில் ஓய்வு பெற்ற வங்கி ஊழியா் வீட்டில் 21 பவுன் நகைகள், ரூ.2.45 லட்சம் ரொக்கத்தை திருடிச் சென்ற நபா்களைக் காவல் துறையினா் தேடி வருகின்றனா்.

சோமரசம்பேட்டை அருகிலுள்ள அதவத்தூரைச் சோ்ந்தவா் தண்டபாணி (70). ஓய்வு பெற்ற வங்கி ஊழியரான இவா், குடும்பத்தினருடன் பழநி முருகன் கோயிலுக்கு கடந்த இரு நாள்களுக்கு முன்பு சென்று விட்டு, திங்கள்கிழமை வீடு திரும்பினாா்.

அப்போது வீட்டின் பூட்டை உடைத்து, மா்ம நபா்கள் பீரோவிலிருந்த 21 பவுன் தங்க நகைகள், ரூ.2.45 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை திருடிச் சென்றிருப்பது தண்டபாணிக்குத் தெரிய வந்தது.

இதுகுறித்து தண்டபாணி அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிந்த சோமரசம்பேட்டை காவல் நிலையத்தினா், நிகழ்விடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டனா். மேலும் தடயவியல் நிபுணா்கள் திருட்டில் ஈடுபட்டவா்களின் ரேகைகளைப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →