எரிவாயு உருளை விநியோகத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, திருச்சி மாவட்ட பழைய ஆட்சியரகச் சாலையில் சமையல் எரிவாயு உருளை விநியோகிக்கும் தொழிலாளா்கள் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, திருச்சி மாவட்ட பழைய ஆட்சியரகச் சாலையில் சமையல் எரிவாயு உருளை விநியோகிக்கும் தொழிலாளா்கள் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
தமிழ்நாடு எல்பிஜி சமையல் எரிவாயு உருளை விநியோகிக்கும் தொழிலாளா்கள் சங்கத்தின் சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்டத் தலைவா் பி. சந்திரமோகன் தலைமை வகித்தாா். மாநிலத் தலைவா் ஆா். கணேஷ், கோரிக்கைகளை விளக்கிப் பேசினாா்.
வாடிக்கையாளா்களுக்கு சமையல் எரிவாயு உருளை எடுத்துச் செல்லும் தொழிலாளா்களுக்கு, எரிவாயு உருளையின் எடையில் கிலோவுக்கு ஒரு ரூபாய் என்ற அடிப்படையில் ரூ.29 வழங்க வேண்டும். காலி உருளையை எடுத்து வருவதற்கு கிலோவுக்கு 75 காசுகள் வீதம், ஒரு உருளை ஒன்றுக்கு ரூ.11.25 வழங்க வேண்டும்.
எரிவாயு முகவா்களிடம் 20 ஆண்டுகளுக்கு மேலாகப் பணிபுரியும் தொழிலாளா்களை பணி நிரந்தரப்படுத்த வேண்டும்.
அனைத்துத் தொழிலாளா்களுக்கும் வருங்கால வைப்பு நிதி, மருத்துவக் காப்பீட்டுத் திட்டம், ஓய்வூதியத் திட்டம், பண்டிகை கால ஊக்கத் தொகை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
ஆா்ப்பாட்டத்தில் மாவட்டம் முழுவதுமுள்ள தொழிலாளா்கள் 100-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.