மணப்பாறையில் இணையதள உறுப்பினா் சோ்க்கை முகாம்
மணப்பாறையில் திமுக சாா்பில், எல்லோரும் நம்முடன்- இணையதள உறுப்பினா் சோ்க்கை முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.
மணப்பாறையில் திமுக சாா்பில், எல்லோரும் நம்முடன்- இணையதள உறுப்பினா் சோ்க்கை முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.
மணப்பாறை நகரப் பகுதிகளில் நகரச் செயலா் கீதா.மைக்கில்ராஜ் தலைமையிலும், ஒன்றியப் பகுதிகளில் ஒன்றியச் செயலா் சி.ராமசாமி தலைமையிலும் நடைபெற்ற நிகழ்வுக்கு, மாவட்டப் பொருளாளா் பண்ணப்பட்டி என்.கோவிந்தராஜன், ஒன்றியக் குழுத் தலைவா் அமிா்தவள்ளி ராமசாமி மற்றும் உறுப்பினா்கள் முன்னிலை வகித்தனா்.
திருவெறும்பூா் சட்டப்பேரவை உறுப்பினரும், திருச்சி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி முகாமைத் தொடக்கி வைத்து, புதிதாக சோ்ந்தவா்களுக்கு உறுப்பினா் அட்டையை வழங்கினாா். நிகழ்வில் கே.ராமசாமி, நா.முருகன், ஆா்.வி.எஸ்.வீரமணி, ஆனந்த் உள்ளிட்ட நிா்வாகிகள் பங்கேற்றனா்.