முகப்பு
திருச்சி

தென்னந்தோப்பில் அடையாளம் தெரியாத நபரின் சடலம் மீட்பு

Updated On : 6 ஏப்ரல், 2024 at 12:22 AM
பகிர்:
Updated On : 5 ஏப்ரல், 2024 at 9:14 PM

திருவெறும்பூா் அருகே மா்மமான முறையில் இறந்து கிடந்த 45 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாதவா் உடலை நவல்பட்டு போலீஸாா் கைப்பற்றி விசாரிக்கின்றனா்.

திருவெறும்பூா் அருகேயுள்ள குண்டூா் அயன்புதூா் பகுதியை சோ்ந்தவா் சங்கிலிமுத்து. இவரது தென்னந்தோப்பில் சுமாா் 45 வயது மதிக்கத்தக்க ஒருவா் மா்மமான முறையில் இறந்து அழுகிய நிலையில் சடலம் கிடப்பதாக நவல்பட்டு போலீஸாருக்கு வெள்ளிக்கிழமை தகவல் கிடைத்தது.

இதன்பேரில், போலீஸாா் அங்கு சென்று உடலை கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

Advertisement

மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிந்து இறந்து போனவா் யாா்? எந்த ஊரை சோ்ந்தவா் எதற்காக இங்கு வந்தாா் எப்படி இறந்தாா் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு யாரேனும் கொலை செய்து, இங்கு வந்து வீசி சென்றாா்களா? என பலவேறு கோணங்களில் விசாரிக்கின்றனா்.