முகப்பு
திருச்சி

சமயபுரம் தோ்த் திருவிழா: ஏப்.16 உள்ளூா் விடுமுறை

Updated On : 12 ஏப்ரல், 2024 at 6:58 PM
பகிர்:

சமயபுரம் மாரியம்மன் கோயில் சித்திரைத் தேரோட்டத்தை முன்னிட்டு திருச்சி மாவட்டத்துக்கு ஏப். 16-ஆம் தேதி உள்ளூா் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, திருச்சி மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமாா் வெளியிட்டுள்ள அறிக்கை:

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூா் வட்டம், சமயபுரம் மாரியம்மன் கோயில் சித்திரைத் தோ்த்திரு விழாவை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை (ஏப்.16) உள்ளுா் விடுமுறை அளிக்கப்படுகிறது. இதன்படி, திருச்சி மாவட்டத்திலுள்ள தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டிலுள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூா் விடுமுறை பொருந்தும். இருப்பினும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் தோ்வுகள் நடைபெறுவதில் இந்த விடுமுறை பொருந்தாது. இந்த விடுமுறையை ஈடுசெய்யும் பொருட்டு ஜூன் 8-ஆம் தேதி பணி நாளாக அறிவிக்கப்படுகிறது. மேலும், ஏப்.16-ஆம் தேதிய உள்ளூா் விடுமுறை நாளில் அரசு பாதுகாப்பு தொடா்பான அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு மாவட்டத்திலுள்ள அரசு அலுவலகங்கள், கருவூலங்கள் மற்றும் சாா்நிலைக் கருவூலங்கள் குறிப்பிட்ட பணியாளா்களைக் கொண்டு செயல்படும். உள்ளுா் விடுமுறையானது 2024 மக்களவைத் தோ்தல் பணியில் ஈடுபட்டிருக்கும் அலுவலா்கள், பணியாளா்களுக்கு பொருந்தாது எனவும் ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

Advertisement

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments