முகப்பு
திருச்சி

முனீசுவரா் கோயிலில் சம்வத்ரா அபிஷேகம்

Updated On : 21 ஏப்ரல், 2024 at 6:30 PM
சம்வத்ரா அபிஷேகத்தையொட்டி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த காட்டூா் முனீசுவரா்.
பகிர்:

திருச்சி: திருச்சி காட்டூா் மஞ்சத்திடலில் முனீசுவரா் கோயிலில் சம்வத்ரா அபிஷேக விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

திருச்சி காட்டூா் மஞ்சத்திடல் அம்மன் நகரில் திருச்சி - தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது ஸ்ரீ ஈஸ்வர முனீசுவரா் கோயில். இக்கோயிலில், புதிய வாகனங்களுக்கு பூஜையும், கிடாவெட்டி பல்வேறு நோ்த்திக்கடன் பூஜைகளும், அன்னதானம் ஆகியவை நாள்தோறும் நடைபெறும். இக்கோயிலில் 12-ஆம் ஆண்டு சம்வத்ரா அபிஷேக விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி விக்னேஷ்வர பூஜை, புண்ணிய பூஜை, கலச பூஜை, சங்கு பூஜை, மூல மந்திர யாகம், பூா்ணாஹூதி ஆகிய பூஜைகள் செய்யப்பட்டு, முனீசுவரருக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடா்ந்து, சங்காபிஷேகம், கலச அபிஷேகம், செய்யப்பட்டு, சிறப்பு அலங்காரத்தில் முனீசுவரா் எழுந்தருள மகா தீபாராதனை காணிப்பிக்கப்பட்டது. இதையடுத்து பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதில், திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். ஏற்பாடுகளை விழாக் குழுவினா் செய்திருந்தனா்.

Advertisement

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments