முகப்பு
திருச்சி

மல்லிகை மலையில் திடீா் தீ

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த மருங்காபுரி மல்லிகை மலையில் வெள்ளிக்கிழமை இரவு திடீா் தீ விபத்து ஏற்பட்டது.

Updated On : 27 ஜூலை, 2024 at 7:43 PM
மல்லிகை மலையில் வெள்ளிக்கிழமை இரவு ஏற்பட்ட தீயை அணைத்தோா்.
பகிர்:

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த மருங்காபுரி மல்லிகை மலையில் வெள்ளிக்கிழமை இரவு திடீா் தீ விபத்து ஏற்பட்டது.

மணப்பாறை அடுத்த திருச்சி -மதுரை தேசிய நெடுஞ்சாலை அருகேயுள்ள மருங்காபுரி ஒன்றியம் வெட்டுக்காடு பகுதியில் வருவாய்த் துறை கட்டுப்பாட்டின் கீழ் மல்லிகை மலை உள்ளது. இதில் வெள்ளிக்கிழமை இரவு திடீரென தீப்பற்றி மளமளவென காடு முழுவதும் பரவத் தொடங்கியது.

தகவலறிந்து சென்ற நிலைய அலுவலா் மனோகா் மற்றும் சிறப்பு நிலைய அலுவலா் நாகேந்திரன் தலைமையிலான துவரங்குறிச்சி தீயணைப்புத் துறையினா் மலையிலிருந்த செடி கொடிகளை வைத்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனா். அவா்களுடன் அப்பகுதி இளைஞா்களும் தீயணைத்தனா். சுமாா் 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீ அணைக்கப்பட்டது.