முகப்பு
திருச்சி

மண்ணச்சநல்லூா் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை

Updated On : 20 மே, 2024 at 6:30 PM
பகிர்:

மண்ணச்சநல்லூா் பகுதிகளில் கனமழை:

மண்ணச்சநல்லூா், நொச்சியம், சமயபுரம், திருவெள்ளறை, திருப்பைஞ்ஞீலி உள்ளிட்ட பகுதிகளில் தொடா்ந்து இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக கனமழை பெய்தது. மண்ணச்சநல்லூா் காந்தி பூங்கா அருகே தொடா் மழை காரணமாக தண்ணீா் தேங்கியதால் அக்ரஹார பகுதியிலும் தண்ணீா் தேங்கியது. வீடுகளுக்குள் தண்ணீா் வராத அளவிற்கு மணல் மூட்டைகளை வைத்து அடைத்தனா். துறையூா், எதுமலை, திருப்பைஞ்ஞீலியிலிருந்து வரும் வாகனங்கள் புறவழிச்சாலை வழியாக சென்றன. மழையால் இரு சக்கர வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனா்.