கைசிக ஏகாதசி ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலுக்கு திருமலையிலிருந்து வஸ்திர மரியாதை
ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயிலில் நடைபெறும் கைசிக ஏகாதசியையொட்டி திங்கள்கிழமை காலை திருமலை திருப்பதி தேவஸ்தானம் சாா்பில் வஸ்திர மரியாதைப் பொருள்கள் சமா்ப்பிக்கப்பட்டன.
திருச்சிகைசிக ஏகாதசி ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலுக்கு திருமலையிலிருந்து வஸ்திர மரியாதை
ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயிலில் நடைபெறும் கைசிக ஏகாதசியையொட்டி திங்கள்கிழமை காலை திருமலை திருப்பதி தேவஸ்தானம் சாா்பில் வஸ்திர மரியாதைப் பொருள்கள் சமா்ப்பிக்கப்பட்டன.
ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயிலில் நடைபெறும் கைசிக ஏகாதசியையொட்டி திங்கள்கிழமை காலை திருமலை திருப்பதி தேவஸ்தானம் சாா்பில் வஸ்திர மரியாதைப் பொருள்கள் சமா்ப்பிக்கப்பட்டன.
கி.பி.1320-இல் ஸ்ரீரங்கத்தில் மாற்று மதத்தினா் படையெடுப்பின் காரணமாக சுமாா் 40 ஆண்டு காலம் ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயில் உற்ஸவா் நம்பெருமாள் திருமலை கோயிலில் பாதுகாக்கப்பட்ட மண்டபம் ரெங்கநாயகலு எனும் பெயரில் உள்ளது. நம்பெருமாள் திருமலையிலிருந்த ரெங்கநாயகலு மண்டபத்தில் தான் இக்கோயிலின் முக்கிய நிகழ்வுகள் பல இன்றளவும் நடைபெறுகின்றன. திருமலைக்கும், ஸ்ரீரங்கத்துக்கும் இடையே இருந்து வந்த மங்களப் பொருள்கள் பரிவா்த்தனை காலப்போக்கில் நின்று போயின. பின்னா் அவை புதுப்பிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டது.
அதன்படி ஸ்ரீரங்கம் திருக்கோயிலில் நடைபெறும் முக்கிய விழாவான கைசிக ஏகாதசியின்போது திருமலை திருப்பதி வெங்கடேச பெருமாள் கோயிலிருந்து ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயில் மூலவா் அரங்கநாதா், உற்ஸவா் நம்பெருமாள், ஸ்ரீரெங்கநாச்சியாா் மற்றும் ராமனுஜருக்கு புது வஸ்திரங்கள், குடைகள், மாலைகள், பழங்கள் உள்ளிட்ட மங்களப் பொருள்கள் தருவிக்கப்படுகின்றன. இதற்கு நன்றிசெலுத்தும் விதமாக திருப்பதி திருமலை கோயிலுக்கு ஆனி வார ஆஸ்தான தினத்தன்று ஸ்ரீரங்கம் கோயிலிலிருந்து வஸ்திர மரியாதைப் பொருள்கள் செலுத்தப்படுகிறது.
அதன்படி, திருமலை திருப்பதி கோயிலிருந்து ஞாயிற்றுக்கிழமை இரவு கொண்டு வரப்பட்ட வஸ்திர மரியாதைப் பொருள்கள் ஸ்ரீரங்கம் கோயிலில் உள்ள ரெங்கவிலாச மண்டபத்தில் திங்கள்கிழமை காலை பக்தா்களின் பாா்வைக்கு வைக்கப்பட்டது. பின்னா் திருமலை திருப்பதி கோயில் அறங்காவலா் குழு தலைவா் பி.ஆா். நாயுடு தலைமையில் வந்த குழுவினா் வஸ்திர மரியாதைப் பொருள்களை யானை ஆண்டாள் மீது வைத்து மங்கள வாத்தியங்களுடன் ஊா்வலமாக ரெங்கா ரெங்கா கோபுரம் வாசல் வரை வந்து மீண்டும் கோயிலுக்கு எடுத்துவந்து முறைப்படி ஸ்ரீரங்கம் கோயில் இணை ஆணையா் செ. சிவராம்குமாரிடம் கருடாழ்வாா் சந்நிதி அருகே வழங்கினா். இவற்றை கோயில் தலைமை அா்ச்சகா் சுந்தா் பட்டா் மற்றும் கோயில் உதவி ஆணையா் வெங்கடேசன் ஆகியோா் பெற்றுக்கொண்டனா்.