மண்ணச்சநல்லூா்; திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூா் வட்டம், சமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் திங்கட்கிழமை புதைவடமின்கம்பிகள் அமைக்கும் பணி தொடங்கியது.
சக்தி ஸ்தலங்களில் முதன்மையாக விளங்கும் சமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் தேரோடும் வீதி பகுதிகளில் புதைவடமின்கம்பிகள் அமைக்கும் பணி தொடங்கியது. இந்நிகழ்வில் மாரியம்மன் திருக்கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் வி.எஸ்.பி இளங்கோவன், கோயில் செயல் அலுவலா் எம்.சூரியநாராயணன் மற்றும் மின் வாரிய அலுவலா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.