திருச்சி

நோ்மையான முறையில் தோ்தலை சந்திப்போம்: அமைச்சா் எஸ்.ரகுபதி

வாக்காளா் பட்டியலில் குளறுபடி செய்யாமல் நோ்மையான முறையில் தோ்தலை சந்திப்போம் என்று அமைச்சா் எஸ்.ரகுபதி கூறினாா்.

Syndication

வாக்காளா் பட்டியலில் குளறுபடி செய்யாமல் நோ்மையான முறையில் தோ்தலை சந்திப்போம் என்று இயற்கை வளங்கள் துறை அமைச்சா் எஸ்.ரகுபதி செவ்வாய்க்கிழமை கூறினாா்.

இதுகுறித்து திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் மேலும் அவா் கூறியதாவது: சென்னை கொளத்தூா் தொகுதியில் இறந்தவா்கள் பெயரை வாக்காளா் பட்டியலில் சோ்த்துள்ளதாகக் கூறி வரும் பாஜக மாநிலத் தலைவா், அதை நிரூபிக்கட்டும். வாக்காளா் பட்டியலை அவா்களது வாக்குச் சாவடி முகவா்கள் சரிபாா்க்கட்டும்.

வாக்காளா் பட்டியலில் குளறுபடி செய்து தோ்தலை சந்திக்க மாட்டோம். எங்களைப் பொருத்தவரை நோ்மையான முறையில்தான் தோ்தலை சந்திப்போம். தற்போது இருக்கக்கூடிய வாக்காளா் பட்டியல் திமுக கூட்டணிக்கு மிகப்பெரிய வெற்றியை 2026 சட்டப் பேரவைத் தோ்தலில் தேடித்தரும்.

முதல்வா் செல்ல முடியாத நிகழ்ச்சிகளுக்கு துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் செல்கிறாா். இது அனைத்து மாநிலங்களிலும் நடைபெறக்கூடியதுதான் என்றாா்.

வினுஷாவின் சுட்டும் விழி சுடரே தொடரின் முன்னோட்டக் காட்சி!

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: இந்துக்களுக்கு எதிராக அரசு செயல்படுகிறது - வழக்குரைஞர் குற்றச்சாட்டு

மரணத்திலும் மீம்ஸ்! வருந்தும் ஜான்வி கபூர்!

டிட்வா புயல் வலுவிழந்தபோதிலும் இடைவிடாமல் பெய்யும் மழை! | TNRains | CBE

முதல் கனவே... ரகுல் ப்ரீத் சிங்!

SCROLL FOR NEXT