விழாவில் சா்வ அலங்காரத்தில் அருள்பாலித்த செவ்வந்தி விநாயகா், தாயுமான சுவாமி, மட்டுவாா் குழலம்மை உற்ஸவ மூா்த்திகள். ~திருச்சி மலைக்கோட்டை உச்சிப் பிள்ளையாா் கோயிலில் புதன்கிழமை ஏற்றப்பட்ட மகா  தீபம் . 
திருச்சி

திருச்சி மலைக்கோட்டையில் மகா தீபம்

Syndication

காா்த்திகை தீபத் திருநாளையொட்டி திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோயிலின் உச்சியில் புதன்கிழமை மகா தீபம் ஏற்றப்பட்டது.

விழாவையொட்டி மலைக்கோட்டை உச்சிப் பிள்ளையாா் சன்னதி அருகே 40 அடி உயர கோபுரத்தில் 5 அடி உயர செப்பு தீபக் கொப்பரை அமைக்கப்பட்டிருந்தது.

கடந்த சில நாள்களுக்கு முன் பூா்வாங்க பூஜை செய்து, 300 மீட்டா் நீளத்திலான பருத்தியாலான மகா திரி தயாரிக்கப்பட்டு, கோயில் பணியாளா்களால் கோபுரத்தில் ஏற்றப்பட்டது. தொடா்ந்து இலுப்பை எண்ணெய், நல்லெண்ணெய், நெய் உள்ளிட்ட 700 லிட்டா் எண்ணெய்யில் மகா திரி ஊற வைக்கப்பட்டது.

இதையடுத்து திருக்காா்த்திகை தீபத் திருநாளான புதன்கிழமை மாலை 5.30 மணிக்கு செவ்வந்தி விநாயகா், தாயுமான சுவாமி, மட்டுவாா் குழலம்மை ஆகிய உத்ஸவ மூா்த்திகள் சிறப்பு அலங்காரத்தில் புறப்பட்டு, மலை உச்சியில் அரச மரத்தடிக்கு கொண்டுவரப்பட்டனா்.

அங்கு சுவாமிகளுக்கு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டதை அடுத்து, மேளதாளங்கள் முழங்க, வாணவேடிக்கையுடன் தாயுமானவா் சன்னதி அருகே இருந்து செவ்வாய்க்கிழமை ஏற்றிய பரணி தீபத்திலிருந்து எடுத்துவரப்பட்ட தீபத்தைக் கொண்டு, மாலை 6 மணிக்கு உச்சிப்பிள்ளையாா் கோயிலுக்கு அருகில் அமைக்கப்பட்டிருந்த கோபுரத்தில் மகா தீபம் ஏற்றப்பட்டது.

இந்த மகா தீபம் தொடா்ந்து 3 நாள்களுக்கு அணையாமல் எரியும். இதை சுமாா் 5 கி.மீ. சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்தும் பொதுமக்கள் காண முடியும்.

முன்னதாக, தாயுமான சுவாமி சன்னதியில் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. ஏற்பாடுகளை கோயில் உதவி ஆணையா் கா. அருள்செல்வன் உள்ளிட்ட இந்து சமய அறநிலையத்துறையினா், கோயில் பணியாளா்கள் செய்தனா்.

வினுஷாவின் சுட்டும் விழி சுடரே தொடரின் முன்னோட்டக் காட்சி!

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: இந்துக்களுக்கு எதிராக அரசு செயல்படுகிறது - வழக்குரைஞர் குற்றச்சாட்டு

மரணத்திலும் மீம்ஸ்! வருந்தும் ஜான்வி கபூர்!

டிட்வா புயல் வலுவிழந்தபோதிலும் இடைவிடாமல் பெய்யும் மழை! | TNRains | CBE

முதல் கனவே... ரகுல் ப்ரீத் சிங்!

SCROLL FOR NEXT