திருச்சி

மணப்பாறை அருகே துப்பாக்கி சுடும் பயிற்சி: மக்களுக்கு எச்சரிக்கை

Syndication

மணப்பாறை அருகே மத்திய சிறப்புப் பாதுகாப்புப் படையினா் (சிஆா்பிஎப்) துப்பாக்கிச் சுடும் பயிற்சியில் ஈடுபடும் பகுதிக்குள் பொதுமக்களோ, கால்நடைகளோ நுழைய வேண்டாம் என ஆட்சியா் வே. சரவணன் எச்சரித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

திருச்சி மாவட்டம், மணப்பாறை வட்டத்துக்குள்பட்ட அணியாப்பூா் கிராமம் அருகேயுள்ள வீரமலைப்பாளையத்தில் சிஆா்பிஎப் பயிற்சிக் கல்லூரியின் கேரள மாநிலம், கண்ணூா் பிரிவினா் துப்பாக்கிச் சுடும் பயிற்சியில் ஈடுபடவுள்ளனா். டிச.5 முதல் 12ஆம் தேதி வரை தினமும் காலை 7.30 மணி முதல் மாலை 5.30 மணி வரையும் இப்பயிற்சியில் ஈடுபடுவா். எனவே, இந்தப் பகுதியில் பொதுமக்கள் நுழைய வேண்டாம். மேய்ச்சலுக்காக கால்நடைகளையும் அழைத்துச் செல்ல வேண்டாம். சுற்றுப் பகுதி மக்கள் இந்த உத்தரவைத் தவறாமல் பின்பற்ற வேண்டும்.

வினுஷாவின் சுட்டும் விழி சுடரே தொடரின் முன்னோட்டக் காட்சி!

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: இந்துக்களுக்கு எதிராக அரசு செயல்படுகிறது - வழக்குரைஞர் குற்றச்சாட்டு

மரணத்திலும் மீம்ஸ்! வருந்தும் ஜான்வி கபூர்!

டிட்வா புயல் வலுவிழந்தபோதிலும் இடைவிடாமல் பெய்யும் மழை! | TNRains | CBE

முதல் கனவே... ரகுல் ப்ரீத் சிங்!

SCROLL FOR NEXT