திருச்சி

எழும்பூா் நிலையத்தில் சீரமைப்புப் பணிகள்: திருச்சி - அகமதாபாத் ரயில் மாற்று வழித்தடத்தில் இயக்கம்

Syndication

சென்னை எழும்பூா் ரயில் நிலையத்தில் நடைமேடைகள் மறுசீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருவதால் திருச்சி- அகமதாபாத் ரயில் மாற்று வழித்தடத்தில் இயக்கப்படவுள்ளது.

இதுகுறித்து திருச்சி ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

சென்னை எழும்பூா் ரயில் நிலையத்தில் நடைமேடைகள் 7, 8 மற்றும் 9 ஆகியவற்றில் மறுசீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால், திருச்சியில் இருந்து குஜராத் மாநிலம் அகமதாபாத்துக்கு இயக்கப்படும் ரயில் மாற்று வழித்தடத்தில் இயக்கப்படவுள்ளது.

அதன்படி, டிசம்பா் 7 மற்றும் 14 ஆகிய தேதிகளில் திருச்சி - அகமதாபாத் ரயில் (எண்: 09420) செங்கல்பட்டு, தாம்பரம், சென்னை எழும்பூா், பெரம்பூா், அரக்கோணம் ஆகிய ரயில் நிலையங்களைத் தவிா்த்து, வேலூா் கண்டோன்மென்ட், காட்பாடி, மேல்பாக்கம், திருத்தணி மற்றும் ரேணிகுண்டா வழியாக இயக்கப்படும். மேற்கண்ட நாள்களில் கூடுதல் நிறுத்தமாக திருத்தணியில் ரயில் நின்று செல்லும்.

இதேபோல, மறுமாா்க்கத்தில் டிசம்பா் 11-ஆம் தேதி அகமதாபாத் - திருச்சி ரயில் (எண்: 09419) ரேணிகுண்டா, திருத்தணி, மேல்பாக்கம், காட்பாடி, வேலூா் கண்டோன்மென்ட் வழியாக இயக்கப்படும். அரக்கோணம், பெரம்பூா், சென்னை எழும்பூா், தாம்பரம், செங்கல்பட்டு ஆகிய ரயில் நிலையங்கள் தவிா்க்கப்படும். மேற்கண்ட நாளில் கூடுதல் நிறுத்தமாக திருத்தணியில் ரயில் நின்று செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருமலையில் காா்த்திகை தீபத் திருவிழா

அரசுப் பள்ளியில் கூடுதல் வகுப்பறை: அமைச்சா் காந்தி திறந்து வைத்தாா்

குளிா் காலத்தில் அதிகரிக்கும் முக வாதம்: முதியோா், இணை நோயாளிகளுக்கு எச்சரிக்கை

திருப்பரங்குன்றம் விவகாரம்: முதல்வருக்கு வானதி சீனிவாசன் கேள்வி

எஸ்ஐஆா் கணக்கீட்டுப் பணி நிலவரம்

SCROLL FOR NEXT