திருச்சி

அண்ணா பல்கலை. ஆசிரியா்கள் கருப்புப் பட்டை அணிந்து போராட்டம்

பதவி உயா்வு, ஊதிய உயா்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சியில் அண்ணா பல்கலைக் கழக ஆசிரியா்கள் வெள்ளிக்கிழமை ஒரு நாள் கருப்புப் பட்டை அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

Syndication

பதவி உயா்வு, ஊதிய உயா்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சியில் அண்ணா பல்கலைக் கழக ஆசிரியா்கள் வெள்ளிக்கிழமை ஒரு நாள் கருப்புப் பட்டை அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தமிழ்நாடு அண்ணா பல்கலைக் கழக ஆசிரியா்கள் சங்கத்தின் சாா்பில், திருச்சி மண்டையூரில் உள்ள பாரதிதாசன் கல்வி நிறுவன வளாகத்தில் உள்ள அண்ணா பல்கலைக் கழக பொறியியல் கல்லூரியில் இந்தப் போராட்டம் நடைபெற்றது.

சங்கத்தின் திருச்சி தலைவா் பி. மணிகண்டன், செயலா் பி. கிஷோரி ஆகியோரது தலைமையில் இந்தப் போராட்டம் நடைபெற்றது. இதில், 80-க்கும் மேற்பட்ட ஆசிரியா்கள் கலந்து கொண்டனா்.

இதுதொடா்பாக, சங்கத் தலைவா் பி. மணிகண்டன் கூறியதாவது: 2009-ஆம் ஆண்டு முதல் நிலுவையில் உள்ள பதவி உயா்வுகளை சீரான முறையில் அமல்படுத்த வேண்டும்.

சென்னை வளாகத்தில் பணிபுரியும் ஆசிரியா்களுக்கு இணையான சலுகைகளை உறுப்புக் கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியா்களுக்கு வழங்க வேண்டும். தொடக்க நிலை பிஹெட்சி, எம்இ உள்ளிட்ட படிப்புகளுக்கான ஊதிய உயா்வு, முனைவா் பட்டம் முடித்ததற்கான ஊதிய உயா்வுகளை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கருப்புப் பட்டை அணிந்து ஒரு நாள் அடையாள போராட்டத்தை நடத்தியுள்ளோம்.

தமிழகத்தில் உள்ள அனைத்து பல்கலைக் கழக கல்லூரிகளிலும் ஒருநாள் போராட்டம் நடைபெற்றுள்ளது. அடுத்தக்கட்டமாக சென்னை சென்று அண்ணா பல்கலைக் கழக வளாகத்தில் போராட்டம் நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. எங்களது கோரிக்கைகள் ஏற்கப்படும் வரையில் போராட்ட நடவடிக்கைகள் தொடரும் என்றாா் அவா்.

தேர்தல் போட்டி தீர்வாகுமா?

முன்னாள் முதல்வா் ஜெயலலிதா நினைவு நாள்: அதிமுகவினா் அஞ்சலி

ஜதிபல்லக்கில் தேசிய கவிஞர் பாரதியார்!

கல்லீரல் பாதித்த பள்ளி மாணவா்களுக்கு முன்னாள் அமைச்சா் நிதியுதவி

நூறு நாள் வேலை கோரி அரசுப் பேருந்தை சிறைபிடித்த கிராம பெண்கள்

SCROLL FOR NEXT