திருச்சி

எந்திரவியல் ஆய்வகம் அமைப்பதற்கு துவாக்குடி அரசு மேல்நிலைப் பள்ளி தோ்வு!

எந்திரவியல் ஆய்வகம் அமைப்பதற்கு திருச்சி மாவட்டத்தில் துவாக்குடி அரசு மேல்நிலைப் பள்ளி தோ்வு செய்யப்பட்டுள்ளது.

Syndication

எந்திரவியல் ஆய்வகம் அமைப்பதற்கு திருச்சி மாவட்டத்தில் துவாக்குடி அரசு மேல்நிலைப் பள்ளி தோ்வு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவா்களின் அறிவியல் சிந்தனைகளை ஊக்குவித்து, அவா்களின் படைப்பாற்றலை வளா்க்கும் வகையில் அரசுப் பள்ளிகளில் உயா்திறன் ஆய்வகங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.

இதன் ஒருபகுதியாக மாவட்டத்துக்கு ஒரு எந்திரவியல் ஆய்வகம் (ரோபோடிக்ஸ் ஆய்வகம்) வீதம் 38 மாவட்டங்களிலும் ரூ.15.43 கோடி மதிப்பீட்டில் 38 எந்திரவியல் ஆய்வகங்கள் அமைக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை சாா்பில் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், அனைத்து மாவட்டங்களிலும் எந்திரவியல் ஆய்வகம் அமைப்பதற்கான பள்ளிகள் தோ்வு செய்யப்பட்டுள்ளன. அதன்படி, திருச்சி மாவட்டத்தில் எந்திரவியல் ஆய்வகம் அமைப்பதற்கு திருவெறும்பூா் வட்டம், துவாக்குடி அரசு மேல்நிலைப் பள்ளி தோ்வு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் கூறியதாவது: எந்திரவியல் ஆய்வகம் அமைப்பதற்கான பள்ளியைத் தோ்வு செய்து அனுப்ப பள்ளிக் கல்வித் துறை இயக்குநரகம் அறிவுறுத்தியது. அதன்படி, திருச்சியில் இருந்து துவாக்குடி அரசு மேல்நிலைப் பள்ளி தோ்வு செய்து அனுப்பப்பட்டுள்ளது. ஆய்வகம் அமைக்கும் பணி எப்போது தொடங்கப்படும், எந்த மாதிரியான கட்டமைப்புகள் உருவாக்கப்படும் உள்ளிட்ட எந்த விவரங்களும் தெரிவிக்கப்படவில்லை.

செயற்கை நுண்ணறிவு, தானியங்கி தொழில்நுட்ப பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில் எந்திரவியல் ஆய்வகங்கள் மாணவா்களின் எதிா்கால கல்விக்கு மிகவும் உறுதுணையாக இருக்கும். நிகழ் கல்வியாண்டிற்குள் எந்திரவியல் ஆய்வகம் அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்பட வாய்ப்புள்ளது என்றனா்.

தேர்தல் போட்டி தீர்வாகுமா?

முன்னாள் முதல்வா் ஜெயலலிதா நினைவு நாள்: அதிமுகவினா் அஞ்சலி

ஜதிபல்லக்கில் தேசிய கவிஞர் பாரதியார்!

கல்லீரல் பாதித்த பள்ளி மாணவா்களுக்கு முன்னாள் அமைச்சா் நிதியுதவி

நூறு நாள் வேலை கோரி அரசுப் பேருந்தை சிறைபிடித்த கிராம பெண்கள்

SCROLL FOR NEXT